ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டது ஏன்?

இன்று (24) அதிகாலை கைதுசெய்யப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீன் மற்றும் அவரது சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோரிடம் குற்றப் புலனாய்வு திணைக்களம் விசாரணைகளை மேற்கொள்கின்றது.

ஏப்ரல் 21 தாக்குதல்தாரிகளுக்கு உதவியமை மற்றும் அவர்களுடன் தொடர்புகளை மேற்கொண்டிருந்தமை முதலான குற்றச்சாட்டுகளில், குறித்த இருவரும் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அவர்கள் தொடர்பில் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்வதாகவும் பொலிஸ் பேச்சாளர் கூறியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் ரிசாட் பதியுதீன் மற்றும் அவரின் சகோதரர் ரியாஜ் பதியுதீன் ஆகியோர் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் இன்று (24) அதிகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தாமும், தமது சகோதரரும் கைது செய்யப்படவுள்ளதாக தெரிவித்து பாராளுமன்ற உறுப்பினர் ரிசாட் பதியுதீன் ட்விட்டர் பதிவொன்றையும் பதிவு செய்திருந்தார்.

You may also like...