18 வயது யுவதியை பலியெடுத்த கொரோனா

இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி மேலும் 4 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தினார்.

அதன்படி, நாட்டில் கொரோனா தொற்றுக்குள்ளாகி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 638 ஆக அதிகரித்துள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இதற்கமைய, நிட்டம்புவ பிரதேசத்தை சேர்ந்த 35 வயதுடைய ஆண் ஒருவரும், பன்னிபிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 40 வயதுடைய ஆண் ஒருவரும், வத்தளை பிரதேசத்தை சேர்ந்த 18 வயதுடைய யுவதி ஒருவரும் மற்றும் மஹரகம பிரதேசத்தை சேர்ந்த 71 வயதுடைய பெண் ஒருவரும் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் 969 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கையில் 99,691 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவர்களில் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 94036 ஆகும்.

You may also like...