அடுத்த இரண்டு வாரங்கள் தொடர்பில் அரசாங்கம் எடுத்துள்ள தீர்மானம்
நாட்டில் எதிர்வரும் 2 வாரங்களில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டிருந்த அனைத்து அரச நிகழ்வுகளும் நிறுத்தப்பட்டுள்ளன.
ஜனாதிபதி ஊடகப் பிரிவு இதனைத் தெரிவித்துள்ளது.
கொரோனா சுகாதார வழிகாட்டல்களை முறையாக முன்னெடுக்கும் வகையிலேயே இத்தடை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த காலப்பகுதியில் தனியார் பிரிவினரின் நிகழ்வுகள், கூட்டங்கள் மற்றும் விருந்துபசாரங்கள் என்பவற்றிற்கு தனிமைப்படுத்தல் சட்டத்திற்கு அமைய தடை விதிப்பதற்கும் அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
கொவிட்-19 பரவலை தடுக்கும் நோக்கில் இந்த தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.