ஞானசார தேரரை கொலை செய்ய இலங்கை வந்துள்ள அடிப்படைவாத குழு

பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரரை கொலை செய்ய வெளிநாட்டு அடிப்படைவாத குழு இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

திவய்ன சிங்கள நாளிதழ் இந்த செய்தியை வெளியிட்டுள்ளது.

புலனாய்வு பிரிவு தகவல்களை மேற்கோள் காட்டி அந்த செய்தி வௌியிடப்பட்டுள்ளது.

அந்த அடிப்படைவாத குழு மாலைதீவின் ஊடாக இலங்கை வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தகவல் புலனாய்வு பிரிவால் கண்டறியப்பட்டுள்ள நிலையில், ஞானாசார தேரரின் பாதுகாப்பு விடயத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், அவருடைய விகாரைக்கும் பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஞானசார தேரரின் நடவடிக்கைகள் ஒரு மத பரவலுக்கு தடையாக இருப்பதனால் அவரை இவ்வாறு கொலை செய்ய திட்டம் தீட்டப்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர் என்று அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

You may also like...