ரிசாத் பதியுதீன் கைது செய்யப்பட்டதற்கு மகிந்தானந்த கூறியுள்ள காரணம்

இஸ்லாமிய அடிப்படைவாத அமைப்புகளுடன் தொடர்பினை பேணிய குற்றச்சாட்டு தொடர்பிலான சாட்சிகள் கிடைத்துள்ளதன் காரணமாகவே ரிசாத் பதியூதின் கைது செய்யப்பட்டதாக அமைச்சர் மஹிந்தானந்த அலுத்கமகே தெரிவித்துள்ளார்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியும் அடிப்படைவாத அமைப்புகளுடன் இணக்கப்பாடு ஏற்படுத்திக் கொண்டு செயற்பட்டுள்ள விடயங்கள் குறித்து சாட்சிகள் கிடைத்திருப்பதாக அவர் கூறினார்.

“ரிசாத் கைது செய்யப்பட்டது ஏன்? ரிசாத் குறித்த அனைத்து சாட்சிகளும் உள்ளன.

அதுமாத்திரமன்றி மக்கள் விடுதலை முன்னணியின் தேசிய பட்டியல் உறுப்பினர் ஒருவரின் மகன்மார் இருவர் தற்கொலை குண்டுதாரிகளாக இருந்துள்ளனர்.

அத்துடன் மக்கள் விடுதலை முன்னணியுடன் அடிப்படைவாத அமைப்புக்கள் சில இணக்கத்திற்கு வந்துள்ளன. இது குறித்து அனைத்து விடயங்களும் வௌியில் வரும்.

அதனால் இது எதிர்கட்சியை அடக்கும் முறை அல்ல என்பதை நினைவில் கொள்ளவும். ஞாயிறு தாக்குதல் குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க வேண்டும்.

அதனை செய்யும் போது எதிர்கட்சியை அடக்குவதாக கூறுகின்றனர்” என்று அவர் கூறினார்.

நேற்று 24ம் திகதி இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு கூறினார்.

You may also like...