அரச பணியாளர்கள் தொடர்பில் வௌியான விஷேட செய்தி

நாளை முதல் அரச நிறுவனங்களுக்கு கடமைக்கு வர வேண்டிய அரச ஊழியர்களின் எண்ணிக்கையை தீர்மானிக்கு அதிகாரம் குறித்த நிறுவன தலைவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த அறிவுறுத்தல் அடங்கிய சுற்றுநிருபமொன்று நாளை வெளியிடப்பட உள்ளதாக பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.

கொவிட் பரவல் அதிகரித்துள்ள காரணத்தால் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

தற்போதைய கொரோனா நிலைமை காரணமாக, அரச ஊழியர்களை பகுதி,பகுதியாக வேலை செய்ய அழைப்பது தொடர்பான சுற்றறிக்கை நாளை (27) வெளியிடப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் அறிவித்துள்ளார்.

You may also like...