உடல் எடை குறைய சீரகம் – உடல் எடையை குறைக்க டிப்ஸ்

உடல் எடை குறைய என்ன செய்யலாம்? உடல் எடை குறைய சீரகம் எவ்வாறெல்லாம் உதவுகிறது என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

இன்று பலரின் பெரும் பிரச்சினையாக இருப்பது உடல் எடை அதிகரித்தல் தான்.

இது ஆண்கள் பெண்கள் என இருபாலருக்கும் இருக்க கூடிய மிக மோசமான தொல்லையாக உள்ளது.

இதன் தாக்கத்தால் தொப்பையும் அளவுக்கு அதிகமாக பெரிதாகி கொண்டே போகிறது. இதனை எளிதில் குறைக்க உதவும் முக்கிய பொருளாக சீரகம் உள்ளது.

உடல் எடை குறைய சீரகம்

உடல் எடை குறைய சீரகம் - எளிதில் உடல் எடையை குறைக்க

நம் அனைவரது வீட்டு கிச்சனிலும் தவறாமல் இடம் பெற்றிருக்கும் முக்கியமான ஒரு பொருள் சீரகம். இது உடல் எடையை குறைக்க பெரிதும் உதவுகின்றது.

சீரகம் மட்டும் உங்கள் எடையைக் குறைக்கும் வேலையை செய்யாது. சரியான உணவு முறையை பின்பற்றுவதிலிருந்து, கலோரிகளை எரிக்க உதவும்.

இது உணவுகளுக்கு தேவையான மசாலா தயாரிக்க மட்டும் பயன்படும் மூலிகையாக இல்லாமல் நுரையீரல் மற்றும் கல்லீரல் சம்பந்தப்பட்ட பல பிரச்சனைகளை குணப்படுத்த கூடியது. உடலில் உள்ள நச்சுகளை நீக்கி சரும ஆரோக்கியத்தை பாதுகாக்க உதவுகிறது.

அந்தவகையில் உடல் எடையை வேகமாக குறைக்க சீரகத்தை எப்படியெல்லாம் எடுக்க வேண்டும் என்று இங்கு பார்ப்போம்.

உடல் எடை குறைய எளிய வழிகள்

2 டேபிள் ஸ்பூன் சீரகத்தை நீரில் போட்டு இரவு முழுவதும் ஊற வைத்து, மறுநாள் காலையில் அந்த நீரை கொதிக்க வைத்து, வடிகட்டி, அதில் சிறிது எலுமிச்சையை பிழிந்து, இரண்டு வாரத்திற்கு தினமும் காலையில் குடித்து வர, விரைவில் உடல் எடை குறைந்திருப்பதைக் காணலாம்.

தயிரில் 1 டீஸ்பூன் சீரகப் பொடி சேர்த்து கலந்து தினமும் உட்கொண்டு வந்தால், உடல் எடையைக் குறைக்கலாம்.

1/2 டீஸ்பூன் சீரகப் பொடியை நீரில் சேர்த்து, அதோடு தேன் கலந்து தினமும் குடித்து வருவதன் மூலமும் உடலில் உள்ள கொழுப்புக்களைக் கரைத்து உடல் எடையைக் குறைக்கலாம்.

உடல் எடையைக் குறைக்க நினைப்போர் தினமும் சூப்புடன் சீரகப் பொடியை ஒரு டீஸ்பூன் சேர்த்து கலந்து குடித்து வர, உடல் எடை குறையும்.

ஒரு பாத்திரத்தில் கேரட் மற்றும் பிடித்த வேறு காய்கறிகளை சேர்த்து நன்கு வேக வைத்துக் கொள்ளவும்.

பின் அந்த காய்கறிகளில் இஞ்சியை துருவிப் போட்டு, எலுமிச்சை சாறு, சீரகப் பொடி சேர்த்து கலந்து, இரவு நேரத்தில் உட்கொண்டு வர, உங்கள் எடை குறைவதை நன்கு காணலாம்.

நன்மைகள் சீரகம் உடலில் கெட்ட கொழுப்புக்கள் சேர்வதைத் தடுத்து, அதிகப்படியான கலோரிகளை எரிக்கும்.

ஏனெனில் இதில் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கும் ஊட்டச்சத்துக்களும், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகளும் ஏராளமாக உள்ளது.

இதனால் இவற்றை அன்றாட உணவில் எடுத்து வந்தால், கொழுப்புக்களால் அதிகரித்த தொப்பையைக் குறைக்கலாம்.

மாரடைப்பைத் தடுப்பது, ஞாபக சக்தியை அதிகரிப்பது, நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்துவது, இரத்த சோகையை சரிசெய்வது, செரிமானத்தை மேம்படுத்துவது, வாய்வு தொல்லையை நீக்குவது போன்றவற்றை குணமாக்கும் சக்தி சீரகத்திற்கு உண்டு.

உடல் எடையை அதிகரிக்க என்ன வழிகள் என்பது பற்றியும் எமது முன்னைய பதிவுகளில் நீங்கள் வாசிக்கலாம்.

You may also like...