கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டியவை – கர்ப்ப கால உணவு

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டியவை என்ன? சாப்பிடக் கூடாதவை என்ன என்பது கர்ப்பிணிப் பெண்களுக்கு ஏற்படும் சந்தேகம்.

பெண்களுடைய வாழ்கையில் கர்ப்ப காலம் ஒரு அழகிய பயணமாகவே இருக்கும். தாய்மை அடைந்திருக்கும் நேரத்தில் நிறைய ஆச்சரியங்கள், எதிர்பாராத சுவாரஸ்யங்கள் எல்லாம் காத்திருக்கும்.

இந்த நேரத்தில் பெண்களுக்கு உடலளவிலும் மனதளவிலும் பல மாற்றங்கள் ஏற்படும்.

சுருக்கமாகச் சொல்வதென்றால் கருத்தரித்திருக்கும் காலத்தை விட, வேறு முக்கியமான காலகட்டம் பெண்ணுக்கு வாழ்வில் இருக்கவே முடியாது எனலாம்!

கர்ப்ப காலத்தில் என்ன சாப்பிட வேண்டும்?

கர்ப்ப காலத்தில் உணவு குறித்த பல சந்தேகங்கள் கருத்தரித்துள்ள பெண்களுக்கு ஏற்படுவது சகஜம். கர்ப்ப காலத்தில் பெண்களின் ஊட்டச்சத்து தேவை அதிகரிக்கும்.

இந்த சமயத்தில் பெண்கள் இருவருக்காக சாப்பிடுகிறார்கள் என்று கூறுவது வழக்கம்.

அந்த இருவர் வேறு யாருமல்ல தாயும் அவருடைய கருப்பையில் குடியேறியுள்ள பச்சிளம் குழந்தையும் தான்.

கர்ப்ப காலத்தில் ஒரு பெண் தான் வழக்கமாக எடுத்துக்கொள்ளும் சுமார் 2200 கலோரி அளவிலான உணவைத் தாண்டி, 300 கலோரிகள் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும்.

இந்த கலோரிகள் குழந்தையின் ஆரோக்கியத்திற்கும், வளர்ச்சிக்கும் அவசியம். இந்த கலோரிகளை நல்ல சத்து நிறைந்த உணவுகள் மூலம் கிடைக்கப் பெற வேண்டும் என்பதைக் கருத்தில் கொள்ள வேண்டும்.

கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டியவை என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்ப்போம்.

கர்ப்பிணி பெண்கள் சாப்பிட வேண்டியவை

கர்ப்பிணி பெண்களுக்கு, ரத்த சோகை, முதுகு வலி, போதிய தூக்கமின்மை, தசை பிடிப்புகள் மற்றும் கால் வலி போன்றவை ஏற்படுவதால், விரைவில் உடலானது சக்தியின்றி சோர்ந்து விடும். அதனால் அவர்கள் அதிகளவில் சத்தான காய்களை எடுத்துக்கொள்வது நல்லது.

தினமும் ஒரு முட்டையை எடுத்துக் கொள்வது நல்லது. அதில் அதிகமான புரதசத்து உள்ளது. மேலும் அதில் உள்ள மஞ்சள் கருவில் வைட்டமின் டி உள்ளது.

அது, நம் எலும்புகளுக்கும் பற்களுக்கும் வலிமை சேர்க்கும். அதனால் முதுகு வலி வருவதை தவிர்க்க முடியும் .

கீரை வகைகளில் பசலைக் கீரையில் வைட்டமின்களும் புரதங்களும் நிறைந்திருக்கின்றன. அதேசமயம் இதில் ஃபோலிக் ஆசிட் மற்றும் இரும்புச்சத்து அதிகம் இருப்பதால், இதனை கர்ப்பிணிகள் சாப்பிட்டால், சோர்வை நிச்சயம் தடுக்கலாம்.

கடல் உணவுகளில் கர்ப்பிணிகளுக்குத் தேவையான ஒமேகா-3 கிடைக்கும். அத்துடன் அதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகம் நிறைந்துள்ளன. அதே சமயம் அதில் மெர்குரி அதிக அளவில் இருப்பதால், அளவாக சாப்பிட வேண்டும்.

கர்ப்பிணி பெண்கள் முதல் 4மாதம் ஒரு நாளைக்கு 6 டம்பளர் பால் பருக வேண்டும். இதில் குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

இனிப்புக்களுக்கு பதில் உலர் பழங்களை சாப்பிட்டால் வாந்தி மயக்கம் வராது மற்றும் குழந்தைக்கு தேவையான கால்சியம் கிடைத்துவிடும்.

கர்ப்பிணிகள் கேரட் ஜூஸ் அடிக்கடி எடுத்துக் கொள்வது நல்லது. அத்துடன் ஆரஞ்ச் மற்றும் எலுமிச்சை பழத்தில் வைட்டமின் சி மற்றும் ஃபோலிக் அமிலம் அதிக அளவில் உள்ளன. அதை ஜூஸ் செய்து குடிப்பதால் உடலில் உண்டாகும் சோர்வைப் போக்க முடியும்.

வாழைப்பழம் சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க செய்து ரத்த சோகையை தடுக்கும். அத்துடன் ரத்த அழுத்தம் வராமலும் தடுக்கும்.

மேலும் வாழைப்பழத்தில் ஃபோலிக் அமிலம் அதிகம் இருப்பதால், அது உடலில் உள்ள ஹீமோகுளோபினின் எண்ணிக்கையை அதிகரிக்க செய்து பிரசவத்தின் போது உண்டாகும் வலி குறைய வாய்ப்பிருக்கிறது.

You may also like...