பாடசாலைகளை நடத்திச் செல்வது தொடர்பில் கல்வியமைச்சின் செயலாளர் வௌியிட்ட செய்தி

கொரோனா கட்டுப்படுத்துவதற்கான ஜனாதிபதி செயலணி தீர்மானம் ஒன்றை பெற்றுக் கொடுக்கும் வரையில் ஜனவரி 11 முதல் பாடசாலைகளை நடாத்திச் செல்லும் வழிமுறைகளின்படியே தொடர்ந்தும் நடாத்தப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்துப் பாடசாலைகளையும் மூடாமல் பிரதேச நிலைமையை கருத்திற் கொண்டு, பாடசாலை சுகாதார அபிவிருத்திக் குழுக்களுடன் கலந்தாலோசித்து, பாடசாலைகளை நடாத்திச் செல்வது குறித்து அதிபர்கள் தீர்மானங்களை மேற்கொள்வார்கள் என அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில பெரேரா தெரிவித்துள்ளார்.

You may also like...