முகத்தில் உள்ள துளைகள் மறைய வேண்டுமா? சில டிப்ஸ்

முகத்தில் உள்ள துளைகள் மறைய எளிய வழிகள் பற்றி இங்கு காண்போம்….

பொதுவாக பெண்கள் சிலருடைய முகத்தில் சரும துளைகள் காணப்படுவதுண்டு. இது ஆழமான புள்ளிகள் போன்றோ, தடிப்புகள் போன்றோ காட்சியளிக்கும்.

சருமத்தில் துளைகள் இருப்பது இயல்பானது தான் ஆனால் துளைகள் பெரியதாக இருந்தால் தூசு, அழுக்குகள், பாக்டீரியாக்கள் படிவதற்கு வழிவகுத்துவிடும்.

அவை சரும அடுக்குகளுக்குள் எளிதாக ஊடுருவி பருக்கள், கொப்பளம் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்தும்.

சரும துளைகளை சரியாக பாராமரிக்க விட்டால் மேலும் பல சரும பிரச்சினைகளை எதிர்கொள்ள வேண்டியிருக்கும். இவற்றை கண்டறிந்து ஆரம்பத்திலே சரி செய்வது நல்லது.

அந்தவகையில் சருமத்துளைகளை நீக்க கூடிய, முகத்தில் உள்ள துளைகள் மறைய ஒரு சில எளிய வைத்திய முறைகள் என்ன என்பதை பார்ப்போம்.

முகத்தில் உள்ள துளைகள் நீங்க என்ன செய்யலாம்?

முட்டையை உடைத்து ஊற்றி வெள்ளைக்கருவை மட்டும் தரம்பிரித்து முகத்தில் தடவ வேண்டும். நன்கு உலர்ந்ததும் டிஸ்யூ பேப்பரை கொண்டு மெதுவாக துடைத்தெடுக்க வேண்டும்.

பின்பு முகத்தை நன்றாக கழுவி விடலாம். முகத்தில் இருக்கும் கரும்புள்ளிகள், வெண் புள்ளிகளை போக்குவதற்கும் இதனை பயன்படுத்தலாம்.

இரசாயனம் கலந்த அழகு பொருட்களை விட முல்தானி மெட்டியை உபயோகிப்பது சிறப்பானது. காட்டன் துணியில் ஐஸ்கட்டிகளை பொதிந்து சருமத்தில் மென்மையாக தடவ வேண்டும். இதற்கு சரும துளைகளை சுருக்கும் தன்மை உண்டு.

பால், தயிர் அல்லது எலுமிச்சை சாறு போன்ற ஏதாவது ஒன்றுடன் கடலை மாவை கலந்து சருமத்திற்கு உபயோகிக்கலாம். இதனுடன் பப்பாளி மற்றும் அரைத்த மஞ்சளையும் சேர்த்துக்கொள்ளலாம்.

கெட்டி தயிரை முகத்தில் தடவிவிட்டு அரை மணி நேரம் உலரவிட வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் முகத்தை கழுவிவிடலாம். வாரம் இருமுறை இவ்வாறு செய்து வந்தால் சரும துளைகள் குறையும்.

சிறுதளவு சர்க்கரையுடன், ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு டீஸ்பூன் தேன் கலந்து கொள்ள வேண்டும். சர்க்கரை கரைந்ததும் சருமத்தில் தடவி ஐந்து நிமிடங்கள் மசாஜ் செய்ய வேண்டும். பின்பு வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம்.

வெள்ளரியை துண்டுகளாக நறுக்கி முகத்தில் தடவி வந்தால், திறந்தவெளி துளைகள் நீங்கும். வெள்ளரிக்காயை நன்றாக அரைத்து அதனுடன் எலுமிச்சை சாறு கலந்தும் முகத்தில் தடவலாம்.

முகத்தில் மரு மறைய என்ன செய்யலாம்?

முகத்தில் பரு கரும்புள்ள மறைய

You may also like...