கட்டுநாயக்க விமான நிலையம் மூடப்படுமா? அமைச்சர் வௌியிட்ட கருத்து

கொரோனா வைரஸ் (கொவிட் 19) பரவல் காரணமாக தற்போது ஏற்பட்டுள்ள சூழ்நிலையால் கட்டுநாயக்க விமான நிலையத்தை மூடும் எண்ணம் கிடையாது என்று சுற்றுலாத்துறை அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு இன்று (28) கருத்து தெரிவித்த அமைச்சர், சுகாதார அறிவுறுத்தல்களுக்கு அமைய புதிய முறையின் கீழ் விமான நிலைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவித்தார்.

மேலும் இந்தியாவில் இருந்து வரும் மக்கள் விசேட முறையின் கீழ் இலங்கைக்கு கொண்டு வரப்படுகிறார்கள் எனவும், பாதுகாப்பான வழிமுறைகளின் கீழ் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுகிறார்கள் எனவும் அமைச்சர் தெரிவித்தார்.

விமான நிலையம் பொதுமக்களுக்காக திறக்கப்படவில்லை என்றும், பயணிகளுக்காகவே திறக்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

You may also like...