குளிரூட்டப்பட்ட அறைகளில் பணி புரிவோர் அவதானம்

குளிரூட்டப்பட்ட அலுவலகங்கள் அல்லது இடங்களில் பணி புரிவோருக்கு முக்கிய அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.

அதன்படி இவ்வாறான இடங்களில் கடமைகளை செய்பவர்கள் எப்போதும் சுகாதார வழிகாட்டுதல்களைப் பின்பற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விடயத்தை தொற்றுநோயியல் பிரிவின் தலைமை தொற்று நோயியல் நிபுணர் டாக்டர் சுதத் சமரவீர தெரிவித்துள்ளார்.

அவர் இதன்போது மேலும் தெரிவிக்கையில்,

தற்போதைய கொவிட்-19 நிலைமைகளுக்கு மத்தியில் மூடிய அறைகளுக்குள் தொழில் செய்வது மிகவும் ஆபத்தானது.

ஒரு நபர் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை மூடியிருக்கும் ஒரு சிறிய அறையில் இருந்தால், குறிப்பாக குளிரூட்டப்பட்ட பகுதியில், இந்த நோய் மற்றொரு நபருக்கு பரவ அதிகம் வாய்ப்புள்ளது.

எனவே இது போன்ற இடங்களில் ஜன்னல்கள் மற்றும் கதவுகளை முடிந்தவரை திறந்து வைக்குமாறு பரிந்துரைக்கிறோம்.

மேலும் அத்தகைய இடங்களில் முகக் கவசம் அணிவது, கைகளை சவர்க்கரமிட்டு கழுவுதல் போன்ற சுகாதார வழிகாட்டல்களை அவசியம் கடைபிடிக்குமாறும் வலியுறுத்துவதாக குறிப்பிட்டுள்ளார்.

You may also like...