முகப்பரு உடனடியாக போக வேண்டுமா? பருக்கள் மறைய

முகப்பரு நீங்க எளிய வழிகள் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம். முகப்பருக்கள் டீன் ஏஜினரை பாடாய்ப்படுத்தும் பிரச்னை.

பலவகையான கிரீம்களையும் சோப்புகளையும் பயன்படுத்தினாலும், தீர்வு என்னவோ கிடைத்தபாடில்லை. இதனால் ஏற்படும் மனஉளைச்சலும் தாழ்வுமனப்பான்மையும் கடுமையானவை.

முகப்பரு நீங்க இயற்கை மருத்துவம்

முக அழகைக் கெடுக்கும் முகப்பருக்கள் வந்துவிட்டாலே தொல்லைதான். முகப்பரு உடனடியாக போக பல்வேறு இயற்கை வழிகள் உள்ளன.

முகப்பருக்கள் வரும் அறிகுறி தெரிந்தாலே அதை நீக்க முயற்சி செய்வது அவசியம்.

முகம் பளபளப்பாகப் பேணிக் காக்க வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல… ஆண்களுக்கும் உண்டு.. பொடுகுத்தொல்லை, உடல் சூடு காரணமாக முகப்பரு வரலாம்.

அப்படி முகப்பரு உடனடியாக போக, சில வீட்டுக் குறிப்புகளை இங்கு பார்க்கலாம்.

முகப்பருக்களை போக்க என்ன செய்வது? முகப்பரு நீங்க எளிய வழிகள்

வேப்பிலை ஒரு கைப்பிடி எடுத்து நீரில் நன்கு கொதிக்க வைத்து ஆறிய பிறகு அந்த நீரில் முகத்தைக் கழுவி வந்தால் பருக்கள் குறையும். பருத்தொல்லை நீங்க உதவும்.

வெந்தியகீரை ஒரு கைப்பிடி அளவு, துளசி சிறிதளவு,கொத்தமல்லியிலை சிறிதளவு ஆகியவற்றை ஒன்றாக அரைத்து பருக்கள் மீது தடவினால் பருக்கள் மறைய உதவும்.

வெள்ளரி 2 துண்டுகள், தக்காளி 2 துண்டுகள் மற்றும் கரட் 2 துண்டுகள் ஆகியவற்றை ஒன்றாக அரைத்து அவற்றில் தேன் கலந்து முகத்தில் தடவி வர முகப்பருக்கள் நீங்க காணலாம்.

தொற்றுக் கிருமிகளை நீக்கும் ஆற்றல் பூண்டுக்கு உண்டு. குறிப்பாக இதில் இருக்கும் சல்ஃபர் முகப்பருக்களை போக்க கூடியது.

பூண்டை மைய அரைத்து அதன் சாறை பருக்கள் உள்ள இடத்தில் தடவுங்கள். முகப்பருக்கள் நீங்கி, முகம் பளிச்சென்று அழகு பெறும்.

முகப்பரு வர காரணம் ஆன கிருமிகளை எலுமிச்சை முற்றிலும் அழித்துவிடும். எலுமிச்சை சாறைப் பிழிந்து, பஞ்சில் நனைத்து பருக்களின் மேல் ஒத்தி எடுங்கள். பருக்கள் உடைந்து இருந்த இடம் தெரியாமல் போகும்.

புதினா இலையில் இருக்கும் சாலிசிலிக் அமிலம் பருக்களை போக்க உதவும். மூடியுள்ள சருமத் துளைகளை நீக்கும். இறந்த செல்களையும் நீக்கும்.

புதினா இலையை அரைத்து அதில் தேன் கலந்து முகத்தில் தடவி 20 நிமிடங்கள் கழித்து கழுவ நல்ல பலன் கிடைக்கும். முகத்தில் உள்ள பருக்கள் நீங்க உதவும்.

சந்தனத்தூளைப் பன்னீரில் குழைத்து, முகத்தில் பூசி, 15 நிமிடங்கள் கழித்து முகத்தைக் கழுவ வேண்டும். மூன்று மாதங்கள் இவ்வாறு செய்துவந்தால், பருத்தொல்லை நீங்க உதவும். சந்தனக் கட்டையைப் பன்னீர் விட்டு அரைத்து, முகத்தில் தடவினால், பருக்களால் ஏற்பட்ட வடுக்கள் மறையும்.

அறுகம்புல் பொடியையும் குப்பைமேனி இலைப் பொடியையும் குளிர்ந்த நீரில் கலந்து, பருக்களில் தடவலாம். இது, சிறந்த கிருமி நாசினியாகச் செயல்படுகிறது. பருவைக் குணமாக்கும்.

முகப்பருக்கள் வராமல் தடுப்பது எப்படி?

சுத்தமான காற்றும், சூரிய ஒளியும் முகத்துக்குத் தேவை. அவ்வப்போது காலையில் 7 முதல் 8 மணி வரை சன்பாத் எடுப்பது அவசியம்.

முகப்பருக்கள் வராமல் தடுக்க உணவுக் கட்டுப்பாடு மிகவும் அவசியம். எளிதில் ஜீரணம் ஆகக்கூடிய உணவுகளையே உண்ண வேண்டும். பழங்கள்,​ காய்கறிகள்,​ கீரை வகைகளை உணவில் அதிகம் சேர்க்க வேண்டும்.

கீரைகள் மற்றும் பச்சைக் காய்கறிகளை நிறையச் சாப்பிட வேண்டும். தினமும் இரண்டு லிட்டருக்குக் குறையாமல் தண்ணீர் குடிக்க வேண்டும்.

கொழுப்பு நிறைந்த அசைவ உணவுகளையும், நெய், வெண்ணெய், கேக், ஐஸ்கிரீம், சாக்லேட், பாலாடை போன்றவற்றையும் தவிர்ப்பது நல்லது.

பருக்கள் ஏற்பட, மலச்சிக்கல் ஒரு முக்கியக் காரணி. அன்றாட உணவுபழக்கத்தைச் சரிசெய்வதன் மூலமாக மலச்சிக்கல் வராமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

பருக்களைக் கிள்ளவோ, அழுத்தவோ கூடாது. மருத்துவரின் பரிந்துரை இல்லாமல், கடைகளில் கிடைக்கும் எந்தவித வாசனை சோப்புகளையும் லோஷன்களையும் பயன்படுத்தக் கூடாது.

முகத்தில் எண்ணெய் வழியாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அவ்வப்போது நீரில் முகத்தைக் கழுவி, சுத்தப்படுத்த வேண்டும். ​

தினமும் உடற்பயிற்சி செய்ய வேண்டும். அவ்வாறு செய்யும்போது வெளியேறும் வியர்வையால், சருமத் துவாரங்களில் உள்ள அழுக்குகள் நீங்கி, பருக்கள் வராமல் தடுக்க உதவும்.

You may also like...