முகம் பளிச்சென்று இருக்க வேண்டுமா? முகம் பொலிவு பெற

முகம் பளிச்சென்று இருக்க வேண்டும், முகம் பொலிவு பெற வேண்டும் என்ற ஆசை ஆண், பெண் இருவருக்கும் இருக்கும்.

பொதுவாகவே ஒவ்வொருவருக்கும் தான் அனைவரின் மத்தியில் அழகாக தெரிய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும்.

அதிலும் பெண்களுக்கு கொஞ்சம் அதிகமாகவே இருக்கத்தான் செய்யும். எவ்வளவுதான் பாதுகாப்பாக வீட்டில் இருந்து வெளியில் சென்றாலும் வெயில், நச்சுக்காற்று போன்றவை நமது சருமத்தின் தன்மையை சீரழித்து விடுகின்றன.

இந்தப் பதிவில் முகம் பொலிவு பெற என்ன செய்ய வேண்டும் என்று பார்ப்போம் Face Fresh Tips In Tamil

பொதுவாக பெண்கள் பல அழகு நிலையங்களுக்கு சென்று முகம் பளிச்சென்று இருக்க வேண்டும் என்று, அதிகம் பணம் செலவழிப்பார்கள்.

அங்கு பயன்படுத்தப்படும் கெமிக்கல் சருமத்திற்கு சில சமயங்களில் பலவகையான பக்கவிளைவுகளை ஏற்படுத்தும்.

சருமத்தின் அழகை அதிகரிக்க நினைப்பவர்கள் செயற்கை முறையை பின்பற்றுவதை இன்றுடன் கைவிடுங்கள்.

இயற்கை முறையில் நாம் வீட்டிலேயே சரும அழகை அதிகரிக்க (Homemade Face Fresh Tips) இங்கு பலவகையான இயற்கை அழகு குறிப்புகள் உள்ளன.

அவற்றை பின்பற்றினாலே என்றும் முகம் பளபளப்பாக இருக்க உதவும்.

இந்தப் பதிவில் நம் வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு, சருமம் பொலிவு பெற என்ன செய்யலாம் என்பதை பற்றி பார்ப்போம்.

முகம் பளிச்சென்று மாற டிப்ஸ் – முகம் அழகு பெற பாட்டி வைத்தியம்

நல்ல பழுத்த தக்காளிப் பழத்தை மிக்ஸியில் அறைத்தோ அல்லது இடித்தோ தக்காளியை விழுதாக தயார்செய்து எடுத்துக்கொள்ளுங்கள்.

தக்காளியை வடிகட்டி சாறு எடுக்க வேண்டாம். தக்காளி பழத்தை அறைத்து விழுதாக தயாரித்துக்கொள்ளவேண்டும்.

அடுத்ததாக இரண்டு ஸ்பூன் முல்தானிமெட்டி தூளுடன், 2 மேசைக்கரண்டி தக்காளி பழ விழுதை நன்றாக கலந்து பேஸ்ட் போல் தயார் செய்து கொள்ளவும்.

இந்த விழுதினை முகத்தில் தடவி 5 நிமிடங்கள் லேசாக மசாஜ் செய்து விடவேண்டும். வட்ட வடிவில் மசாஜ் செய்வது சிறந்தது.

கீழ் பக்கம் இருந்து மேல் பக்கமாக மசாஜ் செய்ய வேண்டும். அதன்பின்பு 2 நிமிடங்கள் கழித்து லேசாக உலர்ந்தது வரும் நிலையில், தண்ணீர் போட்டு முகத்தை சுத்தமாக கழுவி விடலாம்.

காலை ஒரு வேளை, மாலை ஒருவேளை சோப்புக்கு பதில் இந்த விழுதை பயன்படுத்தி முகத்தை கழுவி வருவதால், முகத்தில் இருக்கும் தேவையில்லாத ஒயிட் டெட் செல்ஸ், பிளாக் டெட் செல்ஸ், முகப்பரு, ரேஷஸ் போன்ற பிரச்சனைகள் எல்லாம் நீங்கி, முகம் பொலிவு பெறும்.

முகம் பொலிவு பெற இயற்கையான வழிகள் (Face brightness tips in tamil)

ஒரு தேக்கரண்டி ஓட்ஸ், இரண்டு தேக்கரண்டி தக்காளிச்சாறு, இரண்டு தேக்கரண்டி கேரட் சாறு ஆகியவற்றைக் கலந்து முகத்தில் தடவி , அரை மணி நேரத்துக்கு பின் கழுவவும்.

தோல் நீக்கிய திராட்சையை முகத்தில் தடவி சிறிது நேரம் சென்ற பின் கழுவுவதும் முகத்துக்கு பொலிவைத் தரும்.

முகத்திலுள்ள பருக்களை நீக்க ஒரு பல் பூண்டு அல்லது துண்டு கிராம்பை அரைத்து அதை விரல் நுனியில் தொட்டு பரு மீது வைத்தால், அது அப்படியே அமுங்கிவிடும்.

எண்ணெய் மயமான சருமம் உடையவர்கள் முகம் கழுவும்போது பச்சைப் பயறு மாவு உபயோகிப்பது நல்லது. இரவு உறங்கச் செல்லும் முன்னர் முகத்தை சுத்தமாகக் கழுவுவது நல்லது.

எண்ணெய்ப் பசை உள்ள சருமத்தில், முகப் பருக்கள் ஏற்பட சாத்தியம் அதிகம். தினமும் அல்லது அடிக்கடி முருங்கைக்கீரை உணவுடன் சேர்த்துக்கொள்ளவேண்டும்.

பொரித்த மற்றும் வறுவல் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். கட்டாயமாக முகம் கழுவ சோப்பை உபயோகிக்கக்கூடாது. பயத்தமாவு அலல்து கடலைமாவு உபயோகித்து முகம் கழுவவேண்டும்.

முகம் வெள்ளையாக இருக்க தக்காளி ப்ளீச்

சரும அழகை அதிகரிக்க நினைப்பவர்கள், முகம் வெள்ளையாக இருக்க வேணடும் என நினைப்பவர்கள் இந்த தக்காளி ப்ளீச் செய்யலாம்.

அதற்கு தக்காளியை அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாற்றை விட்டு கலந்து, முகத்தில் தடவி, ஊற வைத்து, பின் கழுவினால் முகம் பட்டுப் போன்று மின்னும்.

இந்த முறையினை தினமும் செய்து வர சருமம் ஆரோக்கியமாக இருக்கும், அதேபோல் என்றும் சருமம் பளிச்சென்று இருக்க உதவும்.

முகம் பளபளப்பாக இருக்க வெள்ளரிக்காய்

சருமத்தில் ஏற்படும் தேவையற்ற பிரச்சனைகளை சரி செய்வதற்கு இந்த வெள்ளரிக்காய் ப்ளீச் மிகவும் பயன்படுகிறது.

அதற்கு வெள்ளரிக்காயின் சிறிய துண்டை எடுத்து அரைத்து, அதில் சிறிது எலுமிச்சை சாறு மற்றும் கடலை மாவு சேர்த்து கலந்து பேஸ்ட் போல் கலந்து, முகத்திற்கு மாஸ்க் போன்று போட்டு, ஊற வைத்து கழுவ வேண்டும்.

இதனால் முகம் பளபளப்பாக இருக்க உதவுவதோடு முகம் பொலிவோடு காணப்படும்.

முகம் பளபளக்க – முகம் பளிச்சென்று இருக்க

சருமத்தின் ஆரோக்கியத்தை பாதுகாக்க ஆலிவ் ஆயில் ப்ளீச் மிகவும் சிறந்த ஒன்று.

எனவே என்றும் முகம் பளிச்சென்று இருக்க ஆலிவ் ஆயிலை ஒரு ஸ்பூன் எடுத்து, அவற்றை சிறிதளவு சர்க்கரையை சேர்த்து சருமத்தில், இந்த கலவையை நன்றாக அப்ளை செய்து, சிறிது நேரம் ஸ்க்ரப் செய்யுங்கள்.

பின்பு சருமத்தை கழுவ வேண்டும். இந்த முறையை வாரத்தில் இரண்டு முறை செய்துவர முகம் பளிச்சென்று இருக்க உதவும்.

You may also like...