இராணுவத் தளபதி இன்று காலை வௌியிட்ட முக்கிய அறிவிப்பு

இன்று (01) தொடக்கம் எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு ஹோட்டல்களில் இடம்பெறும் விருந்துபசாரங்கள், கூட்டங்கள், நிகழ்வுகள் மற்றம் இரவுநேர கேளிக்கை போன்றவைக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, எதிர்வரும் இரண்டு வாரங்களுக்கு இரவு 10 மணியின் பின்னர் குறித்த நிகழ்வுகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதேவேளை நாட்டில் மேலும் சில பகுதிகள் உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

இதற்கமைய,

கொழும்பு மாவட்டம்

பிலியந்தலை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

நாம்பமுணுவ கிராம உத்தியோகத்தர் பிரிவு
கொரகாபிடிய ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவு

காலி மாவட்டம்

அம்பலன்கொடை பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

கொடஹேன கிராம உத்தியோகத்தர் பிரிவு
தல்கஸ்கொட கிராம உத்தியோகத்தர் பிரிவு

அம்பாறை மாவட்டம்

தெஹியத்தகண்டிய பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட,

தெஹியத்தகண்டிய கிராம உத்தியோகத்தர் பிரிவு
கதிராபுர ஆகிய கிராம உத்தியோகத்தர் பிரிவுகள்

இரத்தினபுரி மாவட்டம்

கலவான பொலிஸ் அதிகாரப் பிரிவிற்குட்பட்ட, ஹப்புகொடை கிராம உத்தியோகத்தர் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் இத்தருணம் முதல் தனிமைப்படுத்தப்படுவதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

You may also like...