மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் நடிகர் கமல்ஹாசன் பெற்றுள்ள வாக்குகள்

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வௌியாகிக் கொண்டிருக்கு நிலையில் திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.

வாக்கு எண்ணிக்கை 75 மையங்களில் நடைபெறுகின்றது. ஒவ்வொரு மையத்திலும் சராசரியாக 4 முதல் 5 தொகுதிகளுக்கான வாக்குகள் எண்ணப்படுகின்றன.

அதன்படி தபால் வாக்கு எண்ணிக்கை காலை 8 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகின்றன.

தமிழக சட்டசபை தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், திமுக கூட்டணி அதிக இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் தொடர்பான வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலை பெற்றுவருகிறது.

தமிழக சட்டமன்ற தேர்தல் முடிவுகள் தற்போதைய நிலவரப்படி மொத்தம் 231 தொகுதிகளுக்கான முன்னிலை நிலவரம் தெரியவந்துள்ளது. இதில், மெஜாரிட்டிக்கு தேவையான 118 இடங்களை விட அதிக இடங்களில் திமுக கூட்டணி முன்னிலையில் உள்ளது.

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் பெற்றுள்ள வாக்குகள்

இந்நிலையில் தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கோவை தெற்கில் ம.நீ.ம. தலைவர் கமல்ஹாசன் முன்னிலை வகித்து வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதன்படி கோவை தெற்கில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் 11,325 வாக்குகள் பெற்று முன்னிலை பெற்றுள்ளார்.

அவரைத்தொடர்ந்து காங்கிரஸ் வேட்பாளர் மயூரா ஜெயக்குமார் 10,952 வாக்குகளும், பா.ஜ.க.வின் வானதி சீனிவாசன் 7,651 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

தமிழக சட்டமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் முதலமைச்சர் பழனிசாமி 26,629 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகித்து வருகிறார்.

எடப்பாடி தொகுதியில் 6வது முறையாக போட்டியிடும், தற்போதைய முதலமைச்சர் பழனிச்சாமி, 1984, 1991 தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.

அடுத்து 2006 தேர்தலில் தோல்வியடைந்தார். அதற்கு பிறகு, 2011, 2016 சட்டமன்றத் தேர்தல்களில் தொடர்ந்து வெற்றி பெற்றார்.

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமியை எதிர்த்து திமுகவில் சம்பத்குமார், அமமுக சார்பில் பூக்கடை சேகர், நாம் தமிழர் கட்சி சார்பில் ஸ்ரீரத்னா உள்பட 28 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

இந்த சூழலில் எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் பழனிசாமி, தபால் வாக்குகளின் எண்ணிக்கை முடிவில், முன்னிலை பெற்றுள்ளார். இவருக்கு அடுத்து திமுக வேட்பாளர் சம்பத்குமார் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.

இதன்படி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி 40,834 வாக்குகளும், திமுக வேட்பாளார் சம்பத்குமார் 14,205 வாக்குகளும், நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஸ்ரீரத்னா 2,003 வக்குகளும் பெற்றுள்ளனர்.

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

சென்னை கொளத்தூர் சட்டமன்ற தொகுதியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

சென்னை கொளத்தூர் தொகுதியில் திமுக சார்பில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் களமிறங்கினார்.

அதிமுக சார்பில் ஆதிராஜாராம், அமமுக சார்பில் ஜெ.ஆறுமுகம், மக்கள் நீதி மய்யம் சார்பில் ஜெகதீஷ்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் கெமில்ஸ் செல்வா ஆகியோர் போட்டியிட்டனர்.

வாக்கு எண்ணிக்கை தொடங்கியத்தில் இருந்தே மு.க.ஸ்டாலின் முன்னிலை வகித்து வந்தார். தற்போதைய நிலவரப்படி மு.க.ஸ்டாலின் 7652 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார்.

மு.க.ஸ்டாலின் 12664 வாக்குகளும், ஆதிராஜாராம் 5012 வாக்குகளும் பெற்றுள்ளனர்.

You may also like...