இந்தியாவில் இருந்து இலங்கைக்கு சட்டவிரோதமாக வந்த பெண்கள்
இந்தியாவின் சென்னையில் இருந்து கடந்த 30 ஆம் திகதி சட்டவிரோதமாக இலங்கைக்கு வருகை தந்த பெண் ஒருவரும் அவருடைய இரு பிள்ளைகளும் இன்று (03) காலை புத்தளம் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை குப்பத்தில் இருந்து கடந்த 30 ஆம் திகதி அதிகாலை சட்டவிரோமாக படகு மூலம் குறித்த மூவரும் இலங்கையை வந்தடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
பின்னர் புத்தளம், வேப்பமடு பகுதியில் உள்ள வீடொன்றில் மறைந்திருந்த நிலையில் பொலிஸார் மற்றும் சுகாதார பிரிவினர் குறித்த மூவரை தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தியுள்ளனர்.
பின்னர் குறித்த பெண் மற்றும் அவருடைய 4 மற்றும் 13 வயதுடைய பிள்ளைகள் நேற்றைய தினம் பிசிஆர் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளனர்.
இதில் ஒரு பெண் தனது குழந்தையுடன் புத்தளம் – வேப்பமடுவ பகுதியில் உள்ள வீடொன்றில் தங்கியிருந்துள்ளார் எனவும் குறிப்பிபட்பட்டுள்ளது.