டுபாயில் கிடைத்த அதிர்ஷ்டத்தால் கோடீஸ்வரரான இலங்கை இளைஞர்

டுபாயில் இலங்கை இளைஞன் ஒருவர் அதிர்ஷ்ட இலாபச்சீட்டின் மூலம் முதற்பரிசை பெற்று கோடீஸ்வரர் ஆகியுள்ளார். டுபாயில் விற்பனையாகும் அபுதாபி பிக் டிக்கட் என்ற சீட்டில் இவர் முதலாவது பரிசை பெற்றுள்ளார்.

துபாயில் ஒரு தனியார் நிறுவனத்தில் விற்பனை துறையில் பணிபுரிந்த முகமது மிஷ்பக்(வயது-36) என்ற இளைஞரே மெகா ஜாக்பாட்டை வென்றார்.

அதன்படி (12 மில்லியன் டிரஹம்) 3.3 மில்லியன் அமெரிக்க டாலர்கள் அவருக்கு கிடைத்துள்ளன.

துபாயில் குடியிருப்பாளராக வசித்து வரும் முகமது மிஷ்பாக் ஏப்ரல் 29 அன்று வாங்கிய டிக்கெட் எண் 054978 இற்கே குறிப்பிட்ட பரிசு கிடைத்துள்ளது.

விடுமுறைக்காக தற்போது இலங்கையில் வசித்து வரும் மிஷ்பக் இற்கு தொலைபேசியில் இது தொடர்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

அவர் வென்றுள்ள பரிசுத் தொகையின் இலங்கை ரூபா மதிப்பில் 64 கோடி ரூபா என்று கணிப்பிடப்பட்டுள்ளது.

முகமது மிஷ்பக் கடந்த 10 ஆண்டுகளாக துபாயில் வசிப்பவர்.தனது நண்பர்களுடன் தங்கியிருக்கிறார், அதே நேரத்தில் அவரது மனைவி மற்றும் குழந்தைகள் இலங்கையில் வசித்து வருகின்றனர்.

You may also like...