தங்கம் விலை எப்போது குறையும்? இன்றைய தங்கம் விலை

தங்கம் விலை எப்போது குறையும்? என்று எதிர்பார்த்துக் காத்திருக்கும் நிலையில் சர்வதேச சந்தையில் இன்றைய தங்கம் விலை நிலவரம் சரிவை சந்தித்துள்ளது.

தங்கம் விலையானது சர்வதேச சந்தையில் மீண்டும் இரண்டாவது நாளாக சரிவினைக் கண்டு வருகின்றது.

தங்கத்தின் விலை நிலவரம் என்ன?

தங்கத்தின் விலை நிலவரம் இன்று அவுன்ஸூக்கு 11.10 டொலர்கள் குறைந்து, 1780.55 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

எவ்வாறாயினும் இன்றைய தங்கத்தின் விலை நிலவரம் மாலையாகும் போது சற்று அதிகரித்து, 1781.90 டொலர்களாக விற்பனையாகியுள்ளது.

இன்று முந்தைய அமர்வின் முடிவு விலையினை விட, கீழாகத் தான் தொடங்கியுள்ளது. ஆக தங்கம் விலையானது சற்று குறையலாம் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

எப்படியிருப்பினும் நீண்டகால நோக்கில் இது நல்ல வாய்ப்பே.

உலக சந்தையில் வெள்ளி விலை நிலவரம் இன்று

வெள்ளி விலை நிலவரம் இன்று, தங்கத்தினை விட பலமாக சரிவினைக் கண்டு வருகின்றது. இது தற்போது அவுன்ஸூக்கு 1.29% குறைந்து, 26.613 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது.

இது மீடியம் டெர்மில் சற்று குறைந்திருந்தாலும், நீண்டகால நோக்கில் வாங்க சரியான இடமாகவே பார்க்கப்படுகிறது.

கிரிப்டோகரன்சி முதலீடுகள்

தங்கத்திற்கு இணையாக தற்போது பார்க்கப்படும் முதலீடுகளில், கிரிப்டோகரன்சிகளும் உண்டு. இன்றைய நாளில் இதற்கு உலகம் முழுக்க ஆதரவுகள் பெருகி வருகின்றன.

மேலும் இதில் ஏற்ற இறக்கம் அதிகம் என்பதால் பெரும் முதலீட்டாளர்கள் அதிகமாக இதனை விரும்புகின்றனர். எனினும் இதற்கு எதிராக பாதுகாப்பு புகலிடமாக தங்கம் இருப்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

தங்கம் ஒரு சிறந்த ஹெட்ஜிங் ஆப்சனாகவே இன்றளவிலும் பார்க்கப்படுகிறது. அமெரிக்க டாலரின் மதிப்பு தொடர்ந்து ஏற்ற இறக்கத்தினை கண்டு வருகின்றது.

இது ஒரே மாதிரியாக இல்லை. ஆக டாலரின் மதிப்பு சரியும் போது, தங்கம் பிடித்தமான முதலீடாக மாறலாம்.

அதோடு அமெரிக்க மத்திய வங்கியானது மீண்டும், பொருளாதாரத்தினை மீட்டெடுக்க ஊக்குவிப்பு தொகை பற்றிய நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது.

இது அறிவிக்கப்பட்டால், இது பணவீக்கத்திற்கு வழிவகுக்கும். ஆக இதுவும் தங்கத்திற்கு ஆதரவாகவே அமையும்.

தங்கம் விலை குறையுமா? தங்கம் விலை எப்போது குறையும்?

பொதுவாக தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக காணப்படும்.

ஆனால் கடந்த சில வர்த்தக அமர்வுகளாகவே, தங்கம் விலை நிலவரம் சர்வதேச சந்தையில் சரிவிலும் அதிகரிப்பிலும் மாறி மாறி இருக்கின்றது.

தங்கம் விலையானது எவ்வளவு குறைகிறதோ? அப்போதெல்லாம் வாங்கலாம். ஏனெனில் நீண்டகால நோக்கில் தங்கம் விலையானது நிச்சயம் அதிகரிக்கலாம் என நிபுணர்கள் கூறி வருகின்றனர்.

தங்கம் விலையானது 1750 டாலர்களை சப்போர்ட்டாக கொண்டுள்ளது. இது அடுத்து 1820 டாலர்களை தொடலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

எவ்வாறாயினும், 2022ஆம் ஆண்டளவில் ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1600 அமெரிக்க டொலர்களாக குறைவடையக்கூடும் என பொருளியில் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

You may also like...