தேவாலயத்தின் மீது இடி விழுந்தது – ஆலயத்திற்கு சேதம்

மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள ஆக்காட்டி வெளி கிராம அலுவலகர் பிரிவில் உள்ள குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இன்று வியாழக்கிழமை (6) மாலை இடி, மின்னல் தாக்கம் ஏற்பட்டது.

இன்று வியாழக்கிழமை மதியம் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்த நிலையில் மதியம் 2.30 மணியளவில் குமணாயன் குளம் புனித தோமையார் ஆலயத்தின் மீது இடி வீழ்ந்துள்ளது.

இதன் போது ஆலயத்தினுள் கட்டிட பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த கொண்டு இருந்த மூவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளார்.

ஆலயத்தில் மேற்கூரை சேதமடைந்துள்ளது.

குறித்த சம்பவத்தை தொடர்ந்து ஆலய நிர்வாகத்தினர், பொது மக்கள் இணைந்து ஆலயத்தை சீர் செய்யும் பணியில் ஈடுபட்டனர்.

You may also like...