நாட்டில் அதிக கொரோனா தொற்றாளர்கள் பதிவாகியுள்ள பிரதேசங்கள்

நாட்டில் நேற்று கொவிட்-19 தொற்றுறுதியான 1,939 பேரில் அதிகமானோர் கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளனர். கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின், நாளாந்த அறிக்கையில் இந்த தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

கொழும்பு மாவட்டத்தில் 498 பேருக்கு தொற்று

பிலியந்தலையில் 122 பேருக்கும், முல்லேரியாவில் 55 பேருக்கும், பாதுக்கையில் 51 பேருக்கும், கெஸ்பேவயில் 26 பேருக்கும், வெல்லம்பிட்டியில் 33 பேருக்கும், பத்தரமுல்லையில் 21 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

அத்துடன், கல்கிஸையில் 15 பேருக்கும், பொரளையில் 12 பேருக்கும், வெள்ளவத்தையில் 10 பேருக்கும் என கொழும்பு மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளில் பலருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

கம்பஹா மாவட்டத்தில் 387 பேருக்கு தொற்று

வத்தளையில் 72 பேருக்கும், கொட்டதெனியாவில் 48 பேருக்கும், பியமகயில் 31 பேருக்கும், கடவத்தையில் 11 பேருக்கும், களனியில் 15 பேருக்கும், ராகமயில் 17 பேருக்கும், நீர்கொழும்பில் 13 பேருக்கும் என கம்பஹா மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளில் பலருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

களுத்துறை மாவட்டத்தில் 377 பேருக்கு தொற்று

ஹொரணையில் 50 பேருக்கும், இங்கிரியவில் 26 பேருக்கும், மத்துகமயில் 32 பேர் இருக்கும் என களுத்துறை மாவட்டத்தில் மேலும் பல பகுதிகளில் பலருக்கு தொற்றுறுதியாகியுள்ளது.

ஏனைய மாவட்டங்கள்

கண்டி மாவட்டத்தில் 58 பேருக்கும், குருநாகல் மாவட்டத்தில் 41 பேருக்கும், காலி மாவட்டத்தில் 46 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

யாழ்ப்பாண மாவட்டத்தில் 37 பேருக்கும், கேகாலை மாவட்டத்தில் 24 பேருக்கும், புத்தளம் மாவட்டத்தில் 11 பேருக்கும், அனுராதபுரம் மாவட்டத்தில் 38 பேருக்கும், திருகோணமலை மாவட்டத்தில் 13 பேருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

மாத்தறை மாவட்டத்தில் 50 பேருக்கும், பொலன்னறுவை மாவட்டத்தில் 78 பேருக்கும், மாத்தளை மாவட்டத்தில் 83 பேருக்கும், அம்பாறை மாவட்டத்தில் 17 பேருக்கும், நுவரெலியா மாவட்டத்தில் 24 பேருக்கும், இரத்தினபுரி மாவட்டத்தில் 44 பேருக்கும் கொவிட்-19 தொற்றுறுதியாகியுள்ளது.

வவுனியா மாவட்டத்தில் 14 பேருக்கும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 11 பேருக்கும், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் 36 பேருக்கும், கிளிநொச்சி மாவட்டத்தில் 7 பேருக்கும், முல்லைத்தீவு, பதுளை மற்றும் மொனராகலை மாவட்டங்களில் தலா ஒருவருக்கும் தொற்றுறுதியாகியுள்ளது.

இதேநேரம், மன்னார் மாவட்டத்தில் நேற்று எவருக்கும் தொற்றுறுதியாகவில்லை என கொவிட்-19 பரவல் கட்டுப்பாட்டு தேசிய செயற்பாட்டு மையத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...