மதுக் கடைகள் தொடர்பில் வௌியான அறிவித்தல்

மதுபான சாலைகள் சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய மதுவரித் திணைக்களத்தின் அனுமதி பெற்ற சகல இடங்களிலும் செயற்பட வேண்டிய விதம் தொடர்பான வழிகாட்டல்கள் வெளியிடப்பட்டுள்ளது.

மதுவரித் திணைக்கள ஆணையாளர் நாயகத்தினால் இந்த வழிகாட்டல் வெளியிடப்பட்டுள்ளது.

சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த முதலாம் திகதி வெளியிடப்பட்ட சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இந்த கோவை தயாரிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதற்கமைய மதுபானசாலைகள் அனுமதி வழங்கப்பட்டுள்ள காலப்பகுதியில் மாத்திரம் திறக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் மதுவரித்திணைக்களம் அனுமதி வழங்கியுள்ள உணவகங்களை இரவு 10 மணியுடன் மூடுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

திரையரங்குகளில் உள்ள மதுபான சாலைகள் மறுஅறிவித்தல் வரை மூடப்பட வேண்டும் என மதுவரித்திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

You may also like...