ரஞ்சன் ராமநாயக்க தற்கொலை செய்ய முயற்சியா?

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்க சிறைச்சாலைக்குள் தற்கொலை செய்துகொள்ள முயற்சித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிங்கள ஊடகமொன்று இந்த தகவலை இன்று வெளியிட்டிருக்கின்றது.

பொதுமன்னிப்பு கோரி எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸவினால் ரஞ்சன் ராமநாயக்கவின் கையெழுத்துடன் கடிதமொன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருப்பதோடு அந்தக் கடிதம் இதுவரை ஜனாதிபதியின் கரங்களுக்குக் கிட்டவில்லை எனவும் கூறப்படுகின்றது.

நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் 4 வருட கடூழிய சிறைத்தண்டனையை அனுபவித்துவரும் ரஞ்சன் ராமநாயக்க, தற்சமயம் கடும் மன உளைச்சலுக்குள் சிக்கியிருப்பதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டிருக்கின்றது.

இந்த நிலையில் , ரஞ்சன் ராமநாயக்க தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என்று அவரின் முகநூல் பக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...