இது இலங்கைக்கு நல்ல செய்தி அல்ல – பொது மக்களுக்கு எச்சரிக்கை
இந்தியாவில் பரவி வரும் கொவிட்-19 திரிபானது (B.1.617) இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் ஒவ்வாமை, நோயெதிர்ப்பு மற்றும் கல உயிரியல் பிரிவின் பணிப்பாளர் வைத்திய கலாநிதி சந்திம ஜீவந்தர இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.
இது தொடர்பில் தனது ட்விற்றர் கணக்கில் கருத்து வெளியிட்டுள்ள அவர்,
கடந்த மே 06ஆம் திகதி பெறப்பட்ட மாதிரி ஒன்றில், B.1.617.2 எனும் திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், தரவுகளின் அடிப்படையில் இது இந்தியாவில் பரவி வரும் கொவிட்-19 வைரஸின் B1.1.7 எனும் திரிபுக்கு சமனானது என, அடையாளம் காணப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இது இலங்கைக்கு நல்ல் செய்தி அல்ல என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
கொழும்பிலுள்ள தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நபர் ஒருவரிடமிருந்து பெறப்பட்ட மாதிரியில் குறித்த திரிபு அடையாளம் காணப்பட்டுள்ளது.
இந்தியாவில்தினமும் பல இலட்சம் பேரிடையே பரவி வரும் கொவிட்-19 திரிபானது, மிக வேகமாக பரவும் தன்மை கொண்டதுடன், தினமும் அந்நாட்டில் பல்லாயிரக்கணக்கானோர் பலியாவதற்கும் காரணமாக அமைந்துள்ளது.
இத்திரிபைக் கொண்டுள்ள தொற்றாளர்களுக்கு, சுவாச சிக்கலை உச்ச அளவில் ஏற்படுத்தி, உடலுக்கான ஒட்சிசனை உச்ச அளவில் பயன்படுத்துவதால், ஒட்சிசனின் தேவை அதிகரிக்கச் செய்வதால், விரைவான மரணத்திற்கு அது இட்டுச் செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.
தகவல் – தினகரன்