கொரோனா தொற்றாளர் வீட்டில் திடீரென மயங்கி விழுந்த சிறுமி
களுத்துறை பகுதியில் கொவிட் தொற்றாளர் என அடையாளம் காணப்பட்ட ஒருவர் தங்கியிருந்த வீடொன்றில் வசித்த 16 வயதான சிறுமியொருவர் திடீர் சுகயீனமுற்று வீழ்ந்துள்ளார்.
களுத்துறை நாகொட பகுதியின் விஜித்த மாவத்தை பகுதியில் இந்த சம்பவம் நேர்ந்துள்ளது.
இந்த பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதி என்பதுடன், தனிமைப்படுத்தப்பட்ட பகுதியில் கடமையிலிருந்த பொலிஸ் உத்தியோகத்தர்களின் ஒத்துழைப்புடன் சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தில் அம்பியூலன்ஸ் வண்டி கிடைக்காத நிலையில், குறித்த சிறுமியை முச்சக்கரவண்டி உதவியுடன் வைத்தியசாலைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
குறித்த வீட்டில் பாதிக்கப்பட்ட நபர் தனியான அறையில் தங்கியிருப்பதாக பிரதேச பொது சுகாதார வைத்திய அதிகாரி தெரிவிக்கின்றார்.
போக்குவரத்து வசதியை ஏற்படுத்திக்கொள்வதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, கொவிட் தொற்றாளர் வீட்டிலேயே தஙக வைக்கப்பட்டிருந்ததாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.