உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள்

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க, உடலில் ஆக்ஸிஜன் அதிகரிக்க உதவும் முக்கியமான உணவுகள் குறித்து இந்தப் பதிவில் பார்ப்போம்.

நாம் உயிர் வாழ நுரையீரல் நன்றாக செயல்படுவது அவசியம், நாம் சுவாசிக்கும் காற்றை நுரையீரல் நன்றாக வடிகட்டிய பின்னரே ஆக்சிஜனை உடல் பாகங்களுக்கு அனுப்புகிறது.

நுரையீரல் சரியாக தனது பணியை செய்யாவிட்டால், ஆஸ்துமா நிமோனியா, மூச்சுக்குழாய் அழற்சி, காசநோய், புற்றுநோய் போன்ற மோசமான நோய்கள் தாக்கக் கூடும்.

மனித உடலில் ஆக்சிஜன் அளவு

காய்ச்சல், தொண்டை வலி, வறட்டு இருமல், சுவாசப் பிரச்னை உள்ளிட்ட அறிகுறிகள் உள்ளவர்களுக்கு பல்ஸ் ஆக்சிமீட்டர் மூலம் ரத்தத்தில் உள்ள ஆக்சிஜனின் (SPO2) அளவு கணக்கிடப்படும்.

ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் எவ்வளவு ஆக்சிஜனை உடல் செல்களுக்கு எடுத்துச் செல்கிறது என்பத்தைக் கண்டறியும் பரிசோதனை இது.

ஆக்சிஜன் குறைந்தால். சாதாரணமாக, ஆரோக்கியமான ஒருவரின் உடலில் ஆக்சிஜனின் அளவு 95 முதல் 100 % இருக்கும். ஆனால், இந்த அளவு 94 % க்கும் கீழே குறைந்தால் பிரச்னை தான்.

நுரையீரலில் ஏதோ பிரச்னை இருக்கிறது என்றே அர்த்தம் கொள்ள வேண்டும். கொரோனா நோய் தோற்று ஏற்பட்டிருக்கிறதா என்பதை எளிதாக அறிய உதவும் பரிசோதனை இது.

உடலில் ஆக்சிஜன் அளவு குறைந்தாலே உடல் சோர்வு ஏற்படும். படிக்கட்டுகள் ஏறும்போது அதிகளவு மூச்சு வாங்கும்.

கொரோனா வைரஸின் தாக்கத்தால் பெரும்பாலானவர்களுக்கு நுரையீரல் பாதிக்கப்படைகிறது. எனவே நுரையீரலை பாதுகாக்க ஆக்சிஜனின் அளவை அதிகரிக்க என்னென்ன உணவுகளை சாப்பிடலாம் , ஆக்சிஜன் அதிகரிக்க உணவு என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க உதவும் உணவுகள் – ஆக்சிஜன் அதிகரிக்க

கடல் உணவுகள் மற்றும் இறைச்சி

இறைச்சிகளில் புரோட்டீன், குறிப்பிட்ட பி வைட்டமின்கள், இரும்புச்சத்து போன்றவை அதிகம் உள்ளது. கடல் சிப்பி, மாட்டிறைச்சி, பன்றி இறைச்சி, ஈரல் போன்றவற்றில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது.

மீன்களில் சூரை, சால்மன் போன்றவற்றில் இரும்புச்சத்தை விட புரோட்டீன் அதிகம் உள்ளது. சிக்கன் முட்டையில் இந்த இரண்டு சத்துக்களும் மிதமான அளவில் நிறைந்துள்ளது. ஆகவே இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிட்டு, உங்கள் உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளுங்கள்.

ஆக்ஸிஜன் அளவு அதிகரிக்க பூண்டு

பூண்டில் இயற்கையாகவே ஆண்டிபயாடிக், பூஞ்சை காளான், வைரஸ் தடுப்பு காரணிகள் ஆகியவை காணப்படுகின்றன. கால்சியம், பாஸ்பரஸ், இரும்பு, வைட்டமின்கள் போன்றவைகளும் அதிகமாக உள்ளன.

தினமும் காலையில் வெறும் வயிற்றில் 3 பூண்டு பற்களை உட்கொள்ளலாம். இது தவிர, நீங்கள் மிகவும் உடல் சூடாக உணர்ந்தால், இரவில் பூண்டு ஒரு கிராம்பை ஊறவைத்து, காலையில் அவற்றை உட்கொள்ளுங்கள்.

ஆக்சிஜன் அதிகரிக்க தேன்

ஆயுர்வேத மருத்துவத்தில் முக்கிய இடத்தை பிடித்துள்ள தேனில், பக்டீரியா எதிர்ப்பு பொருட்கள் அடங்கியுள்ளது.

சூடான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட்டால், உடலில் உள்ள நச்சுக்களை நீக்குவதுடன் நுரையீரலையும் பாதுகாக்கலாம்.

ஆக்ஸிஜன் அதிகரிக்க மஞ்சள்

ஆன்டி ஆக்சிடன்ட் மற்றும் அழற்சி எதிர்ப்பு பொருட்கள் நிறைந்துள்ள மஞ்சள் அனைத்து வகையான தொற்றுகளிலிருந்தும் நம்மை பாதுகாக்கும்.

தினமும் தூக்கச் செல்லும் முன், பாலில் மஞ்சள் சேர்த்து குடித்து வரலாம், இது, நுரையீரலை வலுப்படுத்துவதோடு, நோய் எதிர்ப்பு சக்தியையும் கூட்டுகிறது.

ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்க அத்திப் பழம்

ஏ, வைட்டமின்-சி, வைட்டமின்-கே, பொட்டாசியம், மெக்னீசியம், காப்பர் மற்றும் இரும்பு போன்ற அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் அத்தியில் உள்ளன.

அத்தியை தொடர்ந்து சாப்பிட்டு வர, நுரையீரலை வலுப்படுவதுடன், இதய ஆரோக்கியத்திற்கும் சிறந்தது.

உடலில் ஆக்சிஜன் அளவு அதிகரிக்க துளசி

துளசி இலையில் அதிக அளவு பொட்டாசியம், இரும்புச் சத்து, குளோரோஃபில் மெக்னீசியம், வைட்டமின் சி, கரோட்டின் ஆகிய சத்துகள் செறிந்து காணப்படுகின்றன.

இவை, நுரையீரலை வலுவாக வைத்திருக்க உதவுகின்றன. தினமும் 5 இலைகளை மென்று சாப்பிட்டு வரலாம். துளசி இலைகளை சுடுதண்ணீரில் கொதிக்க வைத்து, அந்த நீரை தேநீர் போல அருந்தி பயன் பெறலாம்.

மாம்பழம், பார்லி, பப்பாளி, தர்பூசணி, சாத்துக்குடி

இந்த உணவுகளும் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும். இந்த வகை உணவுகளில் pH அளவானது 8.5 உள்ளது. மற்றும் இது சிறுநீரகங்களை சுத்தம் செய்ய உதவியாக இருக்கும்.

இந்த பழங்களில் உள்ள வைட்டமின்கள் அதிகமாக உள்ளது மற்றும் இவைகள் செரிமானத்தின் போது காரத்தன்மையை உருவாக்கும். பப்பாளி குடலை சுத்தம் செய்து, குடலியக்கத்தை சிறப்பாக வைத்துக் கொள்ளும்.

You may also like...