பொடுகு தொல்லையில் இருந்து தீர்வு வேண்டுமா? இதோ வழிகள்

பொடுகு தொல்லை நீங்க வழிகள், பொடுகு தொல்லைக்கு தீர்வு என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம்.

அனைத்து வயதினரையும் பாதிக்கக்கூடியது பொடுகு பிரச்சினை. இதைக் கண்டுகொள்ளாமல்விட்டால், முடி உதிர்வு ஏற்படும். தலை வழுக்கையாகவும் வாய்ப்பு உண்டு.

கூந்தல் உதிர்வதற்கான பல்வேறு காரணங்களுள் ஒன்று பொடுகுத் தொல்லை. சிலருக்கு பொடுகு காரணமாக அரிப்பு ஏற்படும்.

அரிப்பு நீங்கவும், பொடுகு தொல்லை நீங்க வழிகள், மற்றும் பொடுகு தொல்லை போக இயற்கையான வழிமுறைகளை தெரிந்துகொள்வது நல்லது.

தலையில் பொடுகு ஏன் வருகிறது

வறண்ட சருமம், ஹார்மோன்களின் அளவில் ஏற்படும் மாறுபாடு, பூஞ்சை போன்ற நுண்ணுயிரித் தொற்றுகள், மனஅழுத்தம், முறையற்ற உணவுப் பழக்கம், தலையைச் சுத்தமாகப் பராமரிக்காதது போன்றவை பொடுகுப் பிரச்சினை உருவாக முக்கியக் காரணங்கள்.

ஒழுங்காக தினசரி குளிப்பதில்லை, இத்தகைய தலையில் வியர்வை உற்பத்தியாகி அந்த வியர்வை தண்ணி தலையில் தங்க நேரிடும். இதுவும் பொடுகு வரக் காரணம் எனலாம்.

குளித்த பின் தலையை நன்றாக துடைப்பது கிடையாது. இதனால் தண்ணீர், சோப்பு தண்ணீர் ஆகியன தலையில் தங்கிவிடும். இதனால் பொடுகு வரும்.

பொடுகு வருவதைத் தடுக்க தலையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.

பொடுகுத் தொல்லைக்கு இயற்கை மருத்துவம் – பொடுகு தொல்லை நீங்க பாட்டி வைத்தியம்

எலுமிச்சைச் சாறு, தேங்காய் எண்ணெய் இரண்டிலும் தலா இரண்டு டேபிள்ஸ்பூன் எடுத்து நன்றாகக் கலந்துகொள்ளவும். இந்தக் கலவையை தலைமுடியில் மசாஜ் செய்வதுபோலத் தேய்த்து, 20 நிமிடங்கள் வரை ஊறவைக்க வேண்டும். பிறகு ஷாம்பூ தேய்த்து, தலையை அலச வேண்டும். தேங்காய் எண்ணெய், முடிக்கு ஊட்டமளிக்கும். எலுமிச்சைச் சாறு பொடுகுத் தொல்லையை நீக்கி, முடி வளர்ச்சிக்கு உதவும்.

தயிரைத் தலையில் நன்றாகத் தேய்த்துக்கொள்ள வேண்டும். சுமார் ஒரு மணி நேரம் கழித்து, சிறிது ஷாம்பூ போட்டுக் குளிக்கலாம். தயிர், உடல் உஷ்ணத்தைக் குறைக்கும்; முடிக்கு பளபளப்பையும் தரும். சைனஸ், ஒற்றைத் தலைவலி வரும் பிரச்னை இருப்பவர்கள், இதைத் தவிர்க்கவும்.

பொடுகு தொல்லைக்கு தீர்வு

வெந்தயத்தை தலைக்குதேய்த்து குளித்தால், உடல் உஷ்ணம் குறைந்து பொடுகுத் தொல்லை தீரும். மிளகுதூளுடன் பால் சேர்த்து தலையில்தேய்த்து சில நிமிடங்கள் ஊறியபின் குளித்தால், “பொடுகு தொல்லை நீங்கும்”. தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை தீர வழிகவுக்கும்.

கற்றாழை சாற்றை தலையில் மேல் தோலில்தேய்த்து ஊறவைத்து சிறிது நேரம் கழித்துகுளித்தால் பொடுகு தொல்லை நீங்க உதவும்.

தலையில் சிறிதளவு தயிர் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து ஷாம்பு அல்லது சீயக்காய் தேய்த்து குளித்தால் பொடுகு நீங்கும்.

பொடுகு நீங்க எளிய முறை

வேப்பிலை கொழுந்து துளசி ஆகியவற்றை மைய அரைத்து தலையில் தேய்த்து சிறிதுநேரம் கழித்து குளித்தால் பொடுகுதொல்லை நீங்கும். துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம் பழச்சாற்றுடன் கலந்து தலையில் சிறிது நேரம் ஊறவைத்து கழித்து குளித்தால் பொடுகு பிரச்சனை நீங்க உதவும்.

ஆரஞ்சு தோல்களை நன்கு அரைத்துக்கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சைச் சாற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலையில் தேய்த்து, 30 நிமிடங்கள் ஊறவைத்து பிறகு குளித்தால், பொடுகுத் தொல்லை நீங்க வழியாக இருக்கும்.

பொடுகு தொல்லை தீர

கைப்பிடி மருதாணி இலைகளை அரைத்து, அதில் சிறிது தயிர் மற்றும் எலுமிச்சைச் சாறு சேர்த்துக்கொள்ளவும். இதைத் தலைமுடியில் நன்றாகத் தேய்க்கவும். இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும். பின்னர் கூந்தலை அலசி, குளிக்கலாம். இதனால் பொடுகுத் தொல்லை நீங்கும்; நரை முடி பிரச்னைக்கும் தீர்வு கிடைக்கும். சைனஸ், ஒற்றைத் தலைவலி, சளி பிடிக்கும் பிரச்னை ஆகியோர் தவிர்க்கவும்.

பொடுகு தொல்லை நீங்க என்ன செய்ய வேண்டும் என்ற முந்தையப் பதிவின் மூலமும் உங்களுக்கு தீர்வு கிடைக்கும் என்று நம்புகிறோம்.

பொடுகு தொல்லை போக

You may also like...