இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு தீர்மானமில்லை

இலங்கையை முழுமையாக முடக்குவதற்கு எந்தவொரு தீர்மானமும் இதுவரை அரசாங்கம் எடுக்கவில்லை என்று இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஒருசில பிரதேசங்களில் பயணத்தடை விதிக்கப்படலாம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

நாடளாவிய ரீதியில் தனிமைப்படுத்தல் ஊரடங்குச் சட்டம் விதிக்கப்படப் போவதாக சமூக ஊடகங்களில் வெளியாகிய தகவல்கள் குறித்து ஊடகமொன்றுக்கு இன்று மாலை வெளியிட்ட கருத்தில் இராணுவத் தளபதி இதனைக் கூறினார்.

பயணக்கட்டுப்பாடு விதிக்கப்பட்டாலும் உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை தடையின்றி தொடர்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

You may also like...