இஸ்ரேலின் தாக்குதலில் பலஸ்தீனியர்கள் பலர் பலி

இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனின் காசா பகுதி மீது நடத்திய வான் தாக்குதலில் 20 இற்கும் மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் பலியாகியுள்ளனர்.

உயிரிழந்தவர்களில் பலர் சிறுவர்கள் என்று அல் ஜசீரா செய்திச் சேவை தெரிவித்துள்ளது.

அத்துடன் மேலும் 65 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

ஜெருசலேமில் உள்ள அல் அக்ஸா மசூதி அமைந்துள்ள பகுதியில் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இஸ்ரேல் பொலிஸார் அப்பாவி பொது மக்கள் மீது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இதற்கு பதிலடியாக பலஸ்தீனர்கள் இஸ்ரேல் பொலிசார் மீது கற்களை வீசி எறிந்து தாக்குதல் நடத்தினர்.

இதனால் அப்பகுதியில் தொடர்ந்தும் பதற்றம் ஏற்பட்டு வந்தது.

இந்நிலையில் ஹமாஸ் இராணுவப் பிரிவு நேற்று இஸ்ரேல் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியுள்ளது.

இஸ்ரேல் பொலிஸாரின் தாக்குதல நிறுத்தப்படாமைக்கும், அல் அக்ஸா மசூதியில் இருந்து இஸ்ரேல் படை வௌியறாமைக்கும் எதிராக இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

இதனையடுத்து இஸ்ரேல் இராணுவப் படை நேற்று இரவு பலஸ்தீனின் காசா குடியிருப்பு பகுதியில் தாக்குதல் நடத்தியுள்ளது.

இதனால் சுமார் 20 இற்கும் அதிகமான பொது மக்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

You may also like...