கொரோனா வைரஸில் இருந்து தப்ப மாட்டு சாணம் உண்ணும் மக்கள்

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுக்கும் என்ற நம்பிக்கையில், மாட்டு சாணம், கோமியம் பருகுவது மற்றும் பயன்படுத்துவது தொடர்பில் அதிகளவானோர் கவனத்தை செலுத்தியுள்ளனர்.

இதன்காரணமாக, மாடுகளை பராமரிக்கும் இடமொன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம், குஜராத் மாநிலத்தின் பனஸ்கந்தா மாவட்டம் திடோடா கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

கொரோனா வைரஸில் இருந்து தப்ப மாட்டு சாணம் உண்ணும் மக்கள்

நோயாளிகளுக்கு வெயிலின் தாக்கம் ஏற்படாதவாறு கொரோனா சிகிச்சை மையத்தை சுற்றி, வைக்கோல் நிரப்பி உள்ளதாக கொரோனா சிகிச்சை மைய இயக்குநர் ராம்ரத்தன் மகராஜ் தெரிவித்துள்ளார்.

மேலும், வேதலக்ஷனா பஞ்சகாவ்யா ஆயுர்வேத கொரோனா தனிமைப்படுத்தும் மையம் என பெயரிடப்பட்டுள்ள இந்த மையத்தில் அனுமதி இலவசம். அத்துடன், பஞ்சகாவ்யா ஆயுர்வேத தெரபியை பயன்படுத்தி சிகிச்சை அளிப்பதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

கொரோனா வைரஸில் இருந்து தப்ப மாட்டு சாணம் உண்ணும் மக்கள்

இங்கு நோயாளிகளுக்கு கோமியம், நெய் மற்றும் பசும்பாலில் இருந்து தயாரித்த மருந்துகளையும், மாட்டு சாணம் போட்டு விளைவிக்கப்பட்ட உணவு தானியங்களை வழங்குவதாகவும் கூறப்படுகிறது.

பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு மையத்தில் போதுமான அளவு ஆக்சிஜன் இருப்பதை உறுதி செய்கிறோம் என்றும் மகராஜ் குறிப்பிட்டுள்ளார்.

இதுபோன்ற தனிமைப்படுத்தும் மையங்கள் லேசான அறிகுறி கொண்ட நோயாளிகளுக்கு பயனுள்ளதாக இருக்கும் எனவும், வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்வதற்கு பதிலாக இதுபோன்ற மையத்தில் நோயாளிகள் தங்கலாம் என்றும் மருத்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

கொரோனா வைரஸில் இருந்து தப்ப மாட்டு சாணம் உண்ணும் மக்கள்

அதே சமயம், ஆக்சிஜன் அளவு குறைவான நோயாளிகளுக்கு இங்கு சிகிச்சை அளிப்பது ஆபத்தில் முடியும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, கொரோனா வைரஸ் தொற்றுக்கான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதில் மாட்டு சாணம் அல்லது கோமியம் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்பதற்கு உறுதியான அறிவியல் சான்றுகள் எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் சுட்டிக்காட்டியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You may also like...