கொழும்பு தேசிய வைத்தியசாலையில் குவிந்துள்ள சடலங்கள்

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் பிண அறையில் அடையாளம் காணப்படாத சடலங்கள் குவிந்து கிடப்பதாக தெரிவிக்கப்படுகிறது.

கடந்த மூன்று மாதங்களுள் உயிரிழந்த 20 பேரின் சடலங்களே இவ்வாறு குவிந்து கிடப்பதாக கூறப்படுகிறது.

இந்த சடலங்களில் அதிகமானவை ஆண்களின் சடலங்கள் என்றும் பெண் ஒருவரின் சடலமும் உள்ளதாக வைத்தியசாலை அதிகாரிகள் கூறியுள்ளனர்.

சடலங்களை அடையாளம் காண பொலிஸார் ஊடாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

அடையாளம் காணப்படும் சடலங்களை உறவினர்களிடம் கையளிக்கவும் அவ்வாறு இல்லாத சடலங்களை அரச செலவில் தகனம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்படும் என கொழும்பு தேசிய வைத்தியசாலை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

You may also like...