விமல் தனித்தார்? மஹிந்தவின் கூட்டத்துக்கு வந்த பங்காளிகள்

ஆளும் கட்சியில் அங்கம் வகிக்கும் பங்காளி கட்சிகளின் தலைவர்களுடனான சந்திப்பு, அலரிமாளிகையில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் நேற்றிரவு நடைபெற்றது.

அதில், தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான அமைச்சர் விமல் வீரவன்ச பங்கேற்கவில்லை.

பங்காளி கட்சிகளின் தலைவர்களுடன் இவ்வாறான சந்திப்புகளை ஏற்கெனவே புறக்கணித்திருந்த அமைச்சர்களான வாசுதேவ நாணயக்கார, உதய கம்மன்பில ஆகியோர் நேற்றைய கூட்டத்தில் பங்கேற்றிருந்தனர். அத்துடன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் பங்கேற்றிருந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், பிரதமருடன், அமைச்சர்களான தினேஷ் குணவர்தன, பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் ஆகியோரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஸ்தாபகரான முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷவும் பங்கேற்றிருந்தார்.

You may also like...