வீட்டில் இருந்து வௌியே செல்வோருக்கு விஷேட செய்தி

மாகாணங்களுக்கு இடையிலான பயணக்கட்டுப்பாடு, ஏற்கெனவே அமுலில் உள்ளது. அதன்பிரகாரம், நேற்று 11ஆம் திகதி நள்ளிரவு 12 மணிமுதல் இம்மாதம் 30ஆம் திகதிவரை அக்கட்டுப்பாடு அமுலில் இருக்கும்.

இந்நிலையில்,

நாளை 13ஆம் திகதி இரவு 11மணிமுதல் 16ஆம் திகதி திங்கட்கிழமை அதிகாலை 4 மணிவரை மூன்று நாள்களுக்கு நாடளாவிய ரீதியில், பயணிக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பயணத்தடை அத்தியாவசிய சேவை, தேவைகளுக்கும், கொரோனா வைரஸ் தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள செல்​வோருக்கும் பொருந்தாது.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைக் கூறினார்.

தேசிய அடையாள அட்டை, கடவுச்சீட்டு மற்றும் சாரதி அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்போர், அதன் இறுதி இலக்கத்தை அடிப்​படையாகக் கொண்டு வீடுகளை விட்டு வெளியேறலாம்.

அ​வற்றின் இறுதி இலக்கமாக 1,3,5,7,9 ஆகியன இருந்தால், ஒன்றை எண்களைக் கொண்ட நாள்களில் வீட்டை விட்டு வெளியேறலாம்.

0,2,4,6,8 ஆகிய இலக்கங்கள் இருந்தால், இரட்டை எண்களைக் கொண்ட நாள்களில் வீடுகளிலிருந்து வெளியேறலாம்.

இது, பயணங்கள் முழுமையாக தடைவிதிக்கப்பட்டிருக்கும் 14,15 மற்றும் 16ஆம் திகதிகளுக்கு முழுமையாக பொருந்தாது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன் காரணமாக தொழிலுக்காக அல்லது வேறு அத்தியாவசிய தேவைக்காக வீட்டில் இருந்து வௌியேறும் போது அனைத்து பொதுமக்களும் அடையாள அட்டையை எடுத்துச் செல்வது கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.

அடையாள அட்டை இல்லாத பட்சத்தில் கடவுச்சீட்டு அல்லது சாரதி அனுமதி பத்திரத்தை பயன்படுத்த முடியும்.

You may also like...