கொஸ்கொட தாரக பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி

பிரபல பாதாள உலககுழு தலைவனான கொஸ்கொட தாரக பொலிஸாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

மீரிகம, ரேந்தபொல பிரதேசத்தில் உள்ளதாக கூறப்பட்ட ஆயுதங்களை மீட்பதற்காக கொஸ்கொட தாரக அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

இதன்போது அவர் பொலிஸாரை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதுடன், இதில் அவர் உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றுள்ளதுடன், சம்பவத்தி்ல பொலிஸ் அதிகாரி ஒருவரும் காயமடைந்துள்ளார்.

பல்வேறு குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடைய கொஸ்கொட தாரக பேலியகொட விஷேட விசாரணைப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வந்தார்.

34 வயதுடைய கொஸ்கொட தாரக 04 கொலைச் சம்பவங்களுடன் தொடர்புபட்டுள்ளதுடன், 21 கொள்ளைச் சம்பவங்கள் தொடர்பிலான குற்றச்சாட்டுக்களும் அவர் மீது உள்ளன.

You may also like...