நாட்டில் இரண்டு விதமான பயணத்தடைகள் விதிப்பு
கொவிட் 19 பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நேற்று (12) தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் இரண்டு விதமான பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளது.
நேற்று (12) தொடக்கம் மே மாதம் 31 ஆம் திகதி திங்கட்கிழமை வரை நாளாந்தம் இரவு 11.00 மணி தொடக்கம் அதிகாலை 04.00 மணி வரை பயணத் தடைகள் விதிக்கப்பட்டுள்ளதாக கொவிட் 19 பரவலைத் தடுக்கும் தேசிய செயற்பாட்டு மையத்தின் பிரதானி, இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
அது தவிர இன்று (13) இரவு 11.00 மணி தொடக்கம் எதிர்வரும் திங்கட் கிழமை (17) அதிகாலை 04.00 மணி வரை நாடளாவிய ரீதியில் பயணத் தடைகள் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
ஆயினும் பயணத் தடை விதிக்கப்படும் காலப்பகுதியில் அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் உணவுப் பொருட்களின் போக்குவரத்திற்கு எவ்வித தடையும் இல்லை என இராணுவத் தளபதி குறிப்பிட்டுக் கூறியுள்ளார்.
தேசிய அடையாள அட்டை, சாரதி அனுமதி பத்திரம் மற்றும் கடவுச்சீட்டின் இறுதி இலக்கங்களுக்கு அமைய வீடுகளிலிருந்து வெளியில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் எதிர்வரும் திங்கட்கிழமைக்கு பின்னரே தேசிய அடையாள திட்டம் செல்லுபடியாகும்.