புதிய கொரோனா வைரஸ் வகைகள் பரவி இருக்கலாம்

கண்டறியப்படாத புதிய கொரோனா வைரஸ் வகைகள், சமூகத்தில் இருக்கக்கூடும் என்று, சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.

கொரோனா வைரஸின் புதிய திரிபுகளைக் கொண்ட நபர்கள் சமூகத்தில் இருக்க வாய்ப்புள்ளது எனத் தெரிவித்துள்ள சுகாதார அமைச்சின் தலைமை தொற்றுநோயியல் நிபுணர் டொக்டர் சுதத் சமரவீர, இலங்கைக்கு வருபவர்கள் அனைவருக்கும் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் மேலதிக ஆய்வுகளுக்காக, அவர்களிடமிருந்து மாதிரிகள் எடுக்கப்படுவதாகவும் கூறியுள்ளார்.

தனிமைப்படுத்தல் நிலையமொன்றில் இருந்த ஒரு நபரிடமிருந்து, கொரோனா வைரஸின் இந்திய திரிபு கண்டறியப்பட்டுள்ளது என்றும், ஆரம்ப கட்டங்களில் புதிய திரிபைக் கண்டறியாதவர்கள், இப்போது சமூகத்துடன் சுற்றி வருவதற்கான வாய்ப்பு உள்ளதெனவும் அவர் தெரிவித்துள்ளார்.

You may also like...