அடிப்படைவாதத்தைத் தூண்டும் வகுப்பு நடத்தியவர் கைது
ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலை நடத்திய சஹ்ரான் ஹசீமின் ஒத்துழைப்புடன் அடிப்படைவாதத்தைத் தூண்டும் வகுப்புகளை ஏற்பாடு செய்த நபர் ஒருவர் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
38 வயதான நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை பேச்சாளர் பிரதி காவல்துறை மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைத்து விசாரிக்க உள்ளதாகக் அவர் மேலும் தெரிவித்தார்.