இந்தோனேசியாவில் சுமாத்ரா தீவுக்கு அருகில் பயங்கர நிலநடுக்கம்

இந்தோனேசியாவில் சுமாத்ரா தீவுக்கு அருகில் பாரிய நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

இந்த நிலஅதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 6.7 மெக்னிடியூட்டாக பதிவாகியுள்ளது.

நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்பு குறித்த விவரம் இன்னும் வெளியாகவில்லை.

எனினும், இந்த நில அதிர்வினால் இலங்கைக்கு எவ்வித பாதிப்பும் இல்லையென அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

அத்துடன் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லையென தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் கரையோர வாழ் மக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You may also like...