தனிமைப்படுத்தப்பட்டுள்ள பிரதேச மக்களுக்கு மகிழ்ச்சியான செய்தி

நாட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ள பகுதிகளில் உள்ள குடும்பங்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய நிவாரண பொதியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஒருவாரத்துக்கு மேலாக, தனிமைப்படுத்தப்பட்ட அல்லது முடக்கப்பட்ட பகுதிகளைச் சேர்ந்த குடும்பங்களுக்கு ரூ.5,000 பெறுமதியான நிவாரணப் பொதி வழங்கப்படும் என வர்த்தக அமைச்சு அறிவித்துள்ளது.

இதற்கமைய, பிரதேச செயலாளர்கள் தங்கள் பகுதியில் உள்ள நிவாரணப் பொதியை பெற்றுக்கொள்ள தகுதியானோரை தெரிவுசெய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு 5000 ரூபா பெறுமதியான பொதியை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த நிவாரண பொதி எதிர்வரும் திங்கட்கிழமை முதல் 3 நாட்களுக்குள் வழங்கப்பட உள்ளதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது.

You may also like...