திங்கட்கிழமை முதல் கைது செய்யப்பட உள்ள நபர்கள் – அஜித் ரோஹண விடுத்த எச்சரிக்கை

தேசிய அடையாள அட்டை இலக்க முறை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் கடுமையான முறையில் அமுலாக்கபடவுள்ளதாக பொலிஸ் பேச்சாளர், பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

அதற்கு மாறாக வீடுகளிலிருந்து வெளியே செல்பவர்களை கைதுசெய்து, சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

எதிர்வரும் திங்கட்கிழமை முதல் பொதுமக்கள் தேசிய அடையாள அட்டை இலக்க முறைமைக்கு அமைய, வீடுகளிலிருந்து வெளியேறவேண்டும்.

அதற்கமைய தமது அன்றாட செயற்பாடுகளை திட்டமிட்டுக்கொள்ளுமாறு அவர் அறிவுறுத்தியுள்ளார்.

இதற்கமைய, அடையாள அட்டையின் இறுதி இலக்க முறைமை எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் 31ஆம் திகதிவரை அமுலில் இருக்கும்.

You may also like...