ஈஸ்டர் தாக்குதல் குற்றவாளிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய முடியவில்லை

தனது பதவி காலத்தினுள் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களின் சந்தேகநபர்கள் மற்றும் தாக்குதல் நடத்தியவர்களுக்கு எதிராக தன்னால் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய முடியாதுள்ளதாக சட்டமா அதிபர் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பில், சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, ​பொலிஸ் மா அதிபருக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

அந்த தாக்குதல் தொடர்பில், சந்தேகநபர்கள் ஐவர் தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் மேற்கோள்கள் இருக்குமாயின், அதனை முன்வைக்குமாறும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் தொடர்பிலான சந்தேக நபர்களில், 42 பேர், “ஏ” குழு சந்தேகநபர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது என்றும் அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் விசாரணைகளை முழுமைப்படுத்தாத காரணத்தினால் தனது பதவி காலத்தினுள் ஏப்ரல் 21 தாக்குதல் சூத்திரதாரிகளுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தன்னால் இயலாமல் போயுள்ளதாக மக்களுக்கு சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா தெரிவித்துள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா, இம்மாத இறுதியில், பதவியிலிருந்து முழுமையாக ஓய்வுபெறவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

You may also like...