ஈஸ்டர் தாக்குதல் – 42 பேருக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்தவும்

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பாக ஏ பிரிவில் உள்ள 42 சந்தேகநபர்களுக்கு எதிரான சாட்சியங்களை எழுத்து மூலம் உறுதிப்படுத்துமாறு சட்டமா அதிபர் பொலிஸ்மா அதிபருக்கு அறிவுறுத்தியுள்ளார்.

சட்டமா அதிபர் தப்புல டி லிவேரா பொலிஸ்மா அதிபர் சந்தன விக்கிரமரத்னவிற்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்து இதனை தெரிவித்துள்ளார்.

அதேபோல், சந்தேகநபர்கள் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றதா என அவர் பொலிஸ்மா அதிபரிடம் வினவியுள்ளார்.

5 சந்தேகநபர்கள் தொடர்பிலான விசாரணைகள் முழுமை பெறாமல் உள்ளதாக அவர் குறித்த கடிதத்தின் ஊடாக குறிப்பிட்டுள்ளதாக சட்டமா அதிபரின் ஒருங்கிணைப்பு அதிகாரி அரச சட்டத்தரண நிஷாரா ஜயரத்ன தெரிவித்தார்.

You may also like...