தகனம் செய்ய சில நிமிடங்கள் முன் எழுந்த கொரோனா தொற்றால் உயிரிழந்த மூதாட்டி

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, இறந்ததாக கருதப்பட்ட மூதாட்டி ஒருவர் தகனம் செய்வதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மகாராஷ்டிரா மாநிலத்தைச் சேர்ந்த சகுந்தலா கெய்க்வாட் என்ற 76 வயது மூதாட்டிக்கு கடந்த சில தினங்களுக்கு முன்னர் கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டது.

இதனையடுத்து வீட்டில் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டு சிகிச்சை பெற்று வந்த அவரின் உடல்நிலை வயது மூப்பின் காரணமாக மோசமடைந்தது.

அதனைத்தொடர்ந்து கடந்த மே 10 ஆம் தேதி அவரை அவரது உறவினர்கள் பரமதியில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்க முடிவு செய்து அழைத்துச் சென்றனர்.

ஆனால் அங்கு அவருக்கு படுக்கை கிடைக்காததால் அவர் காரிலேயே காத்திருக்கவைக்கப்பட்டார்.

அதனைத்தொடர்ந்து சுயநினைவு இழந்த மூதாட்டி, அசைவில்லாமல் இருந்துள்ளார்.

அதனைத்தொடர்ந்து மூதாட்டி உயிரிழந்துவிட்டார் என முடிவு செய்த குடும்பத்தினர் இறுதிச்சடங்களுக்கான ஏற்பாடுகளை செய்தனர்.

மூதாட்டி சவப்பெட்டிக்குள் வைக்கப்பட்டு, தகனம் செய்வதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இந்த நிலையில் திடீரென்று யாரும் எதிர்பார்க்காத வகையில் மூதாட்டி அழுதுகொண்டே கண் விழித்தார்.

இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர் அவரை உடனடியாக மருத்துவமனை நோக்கி அழைத்து சென்றனர். அங்கு மூதாட்டிக்கு மேற்சிகிச்சை அளிக்கப்பட்டது.

You may also like...