அல்ஜசீரா மீது இஸ்ரேல் தாக்குதல் – தூக்கமின்றி தவிக்ககும் காசா மக்கள்

பாலஸ்தீனம் மீது தாக்குதல் கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனத்துக்கு இடையில் ஏற்பட்ட பிரச்னையால் அதிகரித்தது.

பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 133 பேர் காசாவிலும், எட்டு பேர் இஸ்ரேலிலும் உயிரிழந்து இருக்கிறார்கள்.

சனிக்கிழமை நடந்த ஒரு விமானப் படை தாக்குதலில், மேற்கு காசா நகரத்தின் அகதிகள் முகாமில் தங்கி இருந்த ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 10 பேர் உயிரிழந்ததாக பாலத்தீன மருத்துவ அமைப்பு கூறுகிறது.

அதில் பெண்கள் மற்றும் குழந்தைகளும் அடக்கம்.

வெள்ளிக்கிழமை, இந்த மோதல் மேற்கு கரைக்கு பரவியது. அதில் குறைந்தபட்சமாக 10 பாலத்தீனர்கள் கொல்லப்பட்டார்கள், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்து இருக்கிறார்கள்.

திங்கட்கிழமை முதல் காசா மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் இதுவரை 140 பலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதுடன், அவர்களில் 39 சிறுவர்களும் அடங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அல்ஜசீரா மீது இஸ்ரேல் வான்படை தாக்குதல்

இன்று (15) காசா டவர் என்ற கட்டிடத்தின் மீது இஸ்ரேல் வான்படை தாக்குதல் நடத்தியுள்ளது.

இந்தக் கட்டிடத்தில் அல்ஜசீரா சர்வதேச ஊடகம் உட்பட சர்வதேச ஊடக நிறுவனங்களில் காரியாலங்கள் இயங்கி வந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.

தாக்குதல் நடத்துவதற்கு ஒருமணித்தியாலம் முன்னதாக தாம் தாக்குதல் நடத்தப் போவதாக இஸ்ரேல் அறிவித்துள்ளது.

ஒரு மணித்தியாலம் முன்னதாக, அங்கிருந்து தமக்கு வௌியேறுமாறு திடீரென இஸ்ரேல் அறிவித்து விட்டு இந்த தாக்குலை நடத்தியுள்ளதாக அல் ஜசீரா கூறியுள்ளது.

எவ்வாறாயினும் அந்தக் கட்டிடத்தில் இருந்தவர்களை வௌியேற்றுவதற்காக மேலும் 30 நிமிட அவகாசம் கேட்கப்பட்ட போதிலும், இஸ்ரேல் இராணுவம் அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டு தாக்குதல் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த இரு ஊடக நிறுவனங்களின் அலுவலகங்களும் செயற்பட்டு வந்த 11 மாடி கட்டடத்தில் பல அலுவலகங்களும் குடியிருப்புகளும் இருந்துள்ளன.

சமாதான முயற்சிக்காக அமெரிக்க தூதர் இஸ்ரேல் பயணம்

இதனிடையே இஸ்ரேல் மற்றும் பாலத்தீனத்துக்கு இடையிலான மோதலின் தீவிரத்தைக் குறைத்து ஒரு முடிவுக்குக் கொண்டு வர அமெரிக்க தரப்பிலிருந்து ராஜீய பேச்சு வார்த்தை நடத்த தூதர் ஒருவர் டெல் அவிவ் நகரத்துக்குச் சென்றிருக்கிறார்.

அவர் மோதலை முடிவுக்குக் கொண்டுவந்து நிலையான அமைதியை ஏற்படுத்துவது தொடர்பாக இஸ்ரேலிய, பாலஸ்தீன மற்றும் ஐ.நா. அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

இதனிடையே ஹமாஸ் போராளிகள் மற்றும் இஸ்ரேல் ராணுவம் இடையிலான மோதல் குறித்து விவாதிப்பதற்காக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நாளை (ஞாயிற்றுக்கிழமை) கூடுகிறது.

ஒரு நீண்ட கால அமைதியை உறுதி செய்வது தான் அவரது வருகையின் நோக்கம் என இஸ்ரேலில் இருக்கும் அமெரிக்க தூதரகம் கூறியுள்ளது.

பாலஸ்தீனம் மீது தாக்குதல் நடத்த காரணம் என்ன?

கிழக்கு ஜெருசலேம் நகரத்தில் ஹில்டாப் வளாகத்தில், இஸ்ரேல் காவலர்கள் மற்றும் பாலத்தீனியர்களுக்கு இடையிலான சிறு சிறு மோதல்கள் தான், தற்போது இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தாக்குதலுக்கு அடிப்படை காரணமாக அமைந்தது.

கிழக்கு ஜெருசலேம் நகரத்தை இஸ்லாமியர்கள் புனித கருவறையாகக் கருதுகிறார்கள். யூதர்கள் அதை கோயில் மலை எனக் கருதுகிறார்கள்.

இஸ்ரேல் அவ்விடத்திலிருந்து தங்கள் காவலர்களை அகற்ற வேண்டும், ஷேக் ஜாரா போன்ற அரேபியர்கள் அதிகம் வாழும் பகுதிகளிலிருந்தும் அவர்கள் வெளியேற வேண்டும் எனக் கூறியது ஹமாஸ் அமைப்பு.

ஷேக் ஜாரா போன்ற மாவட்டங்களில் யூதர்கள் குடியேறுவதால், அங்கிருந்து பாலஸ்தீனர்கள் விரட்டியடிக்கப்படுகிறார்கள்.

ஹமாஸ் கூறியதற்கு இஸ்ரேல் செவி சாய்க்கவில்லை என்பதால், இஸ்ரேல் மீது ஹமாஸ் ராக்கெட் ஏவுகனைகளை ஏவத் தொடங்கியது.

You may also like...