இலங்கையில் உள்ள செல்வந்தர்களுக்கு விஷேட அறிவிப்பு

கொவிட் தொற்றாளர்களுக்காக வைத்தியசாலைகளுக்கு தேவையான வசதிகளை பெற்றுக் கொள்ள ஒத்துழைப்பு வழங்குமாறு இந்நாட்டில் உள்ள செல்வந்தர்களிடம் கோரிக்கை விடுப்பதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்ணாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து சிகிச்சை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் காரணத்தினால் வைத்தியசாலைகளில் குறைபாடுகள் நிலவுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனால் தங்களுடைய பகுதிகளில் உள்ள வைத்தியசாலைகளுக்கு சிறிய அளவிலாவது ஒத்துழைப்பை வழங்குமாறு அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

You may also like...