போக்குவரத்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் – மீண்டும் பொதுப் போக்குவரத்து இரத்து

தமிழ் ​செய்திகள் இன்று


போக்குவரத்து அமைச்சு எடுத்துள்ள தீர்மானம் – மீண்டும் பொதுப் போக்குவரத்து இரத்து

எதிர்வரும் 21 ஆம் திகதி முதல் மீண்டும் நாடு பூராகவும் பயணக் கட்டுப்பாடு விதிக்கப்பட உள்ளதனால் அந்த நாட்களில் பொதுப் போக்குவரத்து நடவடிக்கைகள் இடம்பெற மாட்டாது என போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.

கண்டியில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கருத்து தெரிவிக்கையில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், அத்தியவசிய சேவைகளில் ஈடுபடுகின்றவர்கள் கோரிக்கை விடுத்தால் அதற்காக இலங்கை போக்குவரத்து சபையின் பஸ்களை போக்குவரத்தில் ஈடுபடுத்த தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.

இதேவேளை கொரோனா கட்டுப்பாட்டுக்கான இறுதித் தீர்வு பயண கட்டுப்பாடு விதிப்பது அல்ல, இதற்கான தடுப்பூசியை வழங்குவதே சிறந்த தீர்வாகும் என்றும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.