சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது.

கோடை காலம் என்றாலே அனைவருக்கும் நினைவில் வருவது மாம்பழ சீசன். மாம்பழம் பிடிக்காதவர்கள் யாரும் இருக்க முடியாது.

நீரிழிவு நோய் இருப்பவர்கள் மாம்பழம் சாப்பிடலாமா என்ற சந்தேகம் உள்ளது.

மேலும் நீரிழிவு நோயாளிகளுக்கு மாம்பழம் சாப்பிட வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா? சாப்பிட்டால் சர்க்கரையில் அளவு அதிகரித்து விடுமோ என்ற பயம் இருக்கும்.

https://www.ceylonnation.com/tamil/2021/04/%e0%ae%95%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa-%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%be%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%9f/

நீரிழிவு நோயாளிகள் அவர்களின் சர்க்கரையின் அளவு, கண்ட்ரோலில் இருந்தால் மாம்பழம் சாப்பிடலாம். ஆனால் மாம்பழம் சாப்பிடும் அளவை மட்டும் கவனமாக பார்த்து கொள்ள வேண்டும்.

இவர்கள் ஒரு நாளைக்கு 100 கிராம் வரை சாப்பிடலாம். காலை டிபனுக்கும் மதியம் லஞ்சுக்கும் நடுவில் ஸ்நாக்ஸ் போன்று சாப்பிட்டால் மிகவும் நல்லது. இதனால் சர்க்கரையின் அளவு அதிகரிக்காமல் தடுக்க முடியும்.

இது நீரிழிவு நோய் இருப்பவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக இருக்கும்.

நீரிழிவு நோயாளிகள் – சர்க்கரை நோயாளிகள் சாப்பிட வேண்டிய பழங்கள்

நீரிழிவு நோயாளிகள் உணவு முறை மூலம் அவர்களின் நோயை கட்டுப்படுத்தலாம். அதன்படி நீரிழிவு நோயாளர்கள் சாப்பிட வேண்டிய பழங்கள் என்ன என்று பார்ப்போம்.

தர்பூசணி, முலாம் பழம்

தர்பூசணி, முலாம் பழம் போன்றவற்றில், வைட்டமின்கள்களான ஏ, சி போன்றவை அதிகம் உள்ளது. அதோடு நீர்ச்சத்தும் அதிகளவில் நிறைந்துள்து.

இதனை சாலட் செய்து சர்க்கரை நோய் உள்ளவர்கள் சாப்பிட்டு வந்தால், உடல் வறட்சி அடைவது தடுக்கப்படுவதோடு, சர்க்கரை நோய் தீவிரமடையாமலும் இருக்கும்.

அப்பிள் பழம்

ஆப்பிள் சர்க்கரை நோய்க்கு எதிராக செயல்பட்டு பாதுகாப்பளிக்கும். ஹார்வர்ட் பள்ளியின் பொது சுகாதார ஆய்வில், சுமார் 200,00 மக்களின் டயட்டை ஆராயப்பட்டது.

அதில் வாரத்திற்கு 5-திற்கும் அதிகமாக ஆப்பிள் சாப்பிட்டவர்களுக்கு டைப்-2 சர்க்கரை நோயின் அபாயம், ஆப்பிள் சாப்பிடாதவர்களை விட 23 சதவீதம் குறைவாக இருப்பது தெரிய வந்தது.

எனவே தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடும் பழக்கத்தைக் கொள்ளுங்கள்.

அவகேடோ பழம்

அவகேடோ பழத்தில் இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும் மோனோஅன்சாச்சுரேட்டட் கொழுப்புக்கள் உள்ளது. இது உடலில் நல்ல கொழுப்புக்களின் அளவை அதிகரித்து, இதய நோயின் அபாயத்தைக் குறைக்கும்.

அதேப் போல் அவகேடோ பழத்திற்கும் சர்க்கரை நோய்க்கும் நேர்மறை சம்பந்தம் உள்ளது. அது என்னவெனில் இதில் உள்ள வளமான அளவிலான நல்ல கொழுப்புக்கள், டைப்-2 சர்க்கரை நோயின் அபாயத்தை 25% குறைப்பதாக ஆய்வில் தெரிய வந்தது. ஆகவே சர்க்கரை நோயாளிகள் இப்பழத்தை அச்சமின்றி உட்கொள்ளலாம்.

பப்பாளி பழம்

பப்பாளி பழத்தில் பல ஆரோக்கியமான ஊட்ட சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. இதில் சர்க்கரையின் அளவு மிக குறைவு.

சர்க்கரை நோயாளிகளுக்கு பப்பாளி சிறந்த பழம். உணவு சமிபாட்டுக்கும் பப்பாளி சிறந்த பழம்.

மாதுளம் பழம்

மாதுளை இரத்த ஓட்டத்தை சீராக்கி இரத்தத்தில் ஆக்ஸிஜின் அளவுகளை அதிகரிப்பதால் சர்க்கரை நோயை கட்டுக்குள் வரவழைக்க உதவுகிறது.

அன்னாசிப் பழம்

நம் உடலில் உணவு சமிபாட்டை அதிகரித்தாலே சர்க்கரையின் அளவை கட்டுக்குள் கொண்டுவரலாம்.

ஜீரண சக்தியை அதிகரிப்பதில் முக்கிய பங்கு அன்னாசி வகிக்கிறது. சர்க்கரை நோயாளிகள் பயன்படுத்த வேண்டிய பழங்களில் அன்னாசியும் ஒன்று.

கொய்யாப்பழம்

அதிக சத்துக்கள் நிறைந்த பலன்களில் முதன்மையானது கொய்யாப்பழம். சர்க்கரை நோய் மற்றும் மலச்சிக்கல் பிரச்சனை உள்ளவர்களுக்கு கொய்யாப்பழம் சிறந்த பழமாகும்.

தோல்வியாதி மற்றும் ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் கொய்யாப்பழத்தை தவிர்ப்பது சிறந்தது

திராட்சை பழம்

திராட்சை பழம் இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்துவதோடு இன்சுலின் சுரப்பையும் அதிகரிக்கும். சர்க்கரை நோயாளிகள் திராட்சைப் பழம் அச்சமின்றி சாப்பிடலாம்.