சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வழிகள் என்ன?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வழிகள் என்ன என்று இந்தப் பதிவில் பார்ப்போம். சர்க்கரை நோய் (நீரிழிவு நோய்) இப்போது பலரையும் வாட்டக்கூடிய ஒரு நோய் தான்.

சர்க்கரை நோய்க்கான முக்கிய காரணம் முதலில் குடும்பத்தின் மரபணு மற்றும் முறையற்ற வாழ்க்கை முறையும் சொல்லப்படுகிறது.

சர்க்கரை நோய் சம்பந்தமாக புதிய புதிய கண்டுபிடிப்புகள் வந்து கொண்டே இருக்கின்றன என்பது உண்மை.

ஆரம்ப நிலையில் உள்ள போது, சில முன்னேற்பாடுகளை கடைப்பிடித்தால் சர்க்கரை நோய் வராமல் தடுக்கலாம்.

இல்லாவிட்டால் 5 ஆண்டில் சர்க்கரை நோய் வந்து விடும். சர்க்கரை நோய் வராமல் தடுப்பது எளிது. சரி இந்தப் பதிவில் சர்க்கரை நோயை கட்டுப்படுத்த வழிகள் என்ன என்று பார்ப்போம்.

சர்க்கரை நோயின் அறிகுறிகள் – diabetes symptoms

சர்க்கரை நோய் அல்லது நீரிழிவு நோய் என்பது ஒரு ​நோயே அல்ல. அது ஒரு குறைபாடுதான். ஆரம்பத்திலேய சர்க்கரை நோயைக் கட்டுப்படுத்தச் சிறந்த வழிகள் உள்ளன.

நமது செரிமான அமைப்பு நாம் என்ன உணவு சாப்பிட்டாலும் அதை குளுக்கோஸாக உடைக்கிறது.

இந்த குளுக்கோஸ் இன்சுலின் என்ற ஹார்மோன் உதவியுடன் இரத்தத்தின் மூலம் உறிஞ்சப்படுகிறது.

உடலினால் இன்சுலின் உற்பத்தி செய்ய முடியவில்லை அல்லது அதை திறம்பட பயன்படுத்த முடியவில்லை எனும் போது நீரிழிவு ஏற்படுகிறது.

மிகவும் தாகமாக உணருதல்

அவ்வபோது தொண்டையில் தாகம் எடுப்பது போன்ற உணர்வு அதிகமாக இருக்கும். அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் போன்ற உணர்வு அதிகரிக்கும்.

எவ்வளவு தண்ணீர் குடித்தாலும் தாகம் அடங்காமல் இருக்கும்.

உடலில் இருக்கும் திரவங்கள் அடிக்கடி வெளியேறுவதால் இழந்த நீரை ஈடுகட்ட அவசியமாகிறது. அதனால் தான் அதிக தாகம் உண்டாகிறது.

அதிக பசி ஏற்படும்

முன்பு இருப்பதை விட இப்போது அதிகம் சாப்பிடுகிறீர்கள். உடனே உடனே, அடிக்கடி பசி உண்டாகிறது எனில் அதுவும் நீரிழிவு நோய்க்கு அறிகுறியா, காரணமாக இருக்கலாம்.

உடலின் சர்க்கரை ஆற்றலாக மாற்ற போதுமான இன்சுலின் இல்லாததால் பசியை உண்டாக்கும். அதுவே அதிக பசிக்குக் காரணம்.

அடிக்கடி சிறுநீர் கழித்தல்

அதிகமாக சிறுநீர் கழிக்க வேண்டும் போல் தோன்றுவதும் அடிக்கடி சிறுநீர் கழிப்பதும் சர்க்கரை நோயின் அறிகுறிகள் தான்.

உடலில் உள்ள சர்க்கரையை வெளியேற்றும் முயற்சியாக தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

ஆனால் அதிக தண்ணீர் குடிக்க நேரும் போது அதிக சிறுநீர் கழிப்பதும் இயல்பு என்று பலரும் இதை நினைத்துவிடுகிறார்கள்.

ஆனால் இவை இரண்டுமே சர்க்கரை நோயின் ஆரம்ப கட்ட அறிகுறி என்பதை உணர வேண்டும்.

வாய் உலர்தல்

சர்க்கரை நோயாளிகளுக்கு எச்சில் சுரப்பு குறைவதால் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படும். சில மருந்துகள் எடுப்பதன் காரணமாகவும் வாய் உலர்தல் பிரச்னை ஏற்படலாம்.

வாய் உலர்தல் பிரச்னை தொடர்ந்தால், மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது அவசியம்.

சோர்வு உண்டாகும்

முன்பு போல் எந்த வேலையும் செய்ய முடியவில்லை. உடல் சோர்வாக உள்ளது. களைப்படைந்துவிடுகிறேன் என புலம்புகிறீர்கள் எனில் எச்சரிக்கையாக இருங்கள்.

இது ஊட்டச்சத்து குறைபாடு, சீரற்ற வாழ்க்கை முறையினால் இந்த அறிகுறிகள் உண்டாகும்.

தலைவலி- ஒற்றைத் தலைவலி

நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கு பெரும்பாலும் நரம்பு கோளாறு மற்றும் வாஸ்குலர் வினைத்திறன் காரணமாக தலைவலி குறிப்பாக ஒற்றைத் தலைவலி ஏற்படும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு ஒற்றைத் தலைவலி ஏற்படுவது பல ஆய்வுகளில் பெரும்பாலும் தெரிவிக்கப்படுகிறது.

இவை தவிர பார்வை மங்குதல், சருமத்தில் மாறுபாடு, புண்கள் ஆறுவதில் தாமதம் என்று வேறு சில அறிகுறிகளும் உள்ளன. ஆனால் அதை உணர்ந்து கொள்வது மிகவும் அரிது.

உடலில் ஏற்படும் மாற்றங்கள், சில அறிகுறிகள் இருந்தால் அது சர்க்கரை நோயாகக்கூட இருக்கலாம்.

எனவே, இந்த அறிகுறிகளில் ஒன்றுக்கும் மேற்பட்டவை தென்பட்டால் தாமதிக்க வேண்டாம், மருத்துவரை நாடுங்கள்.

எனக்கு எல்லாம் எந்த நோயும் வராது என்று அசட்டையாக இருந்துவிட வேண்டாம்.

ஆரம்ப நிலையிலிருந்தால் வெறும் உணவுக் கட்டுப்பாடு, உடற்பயிற்சி, மாத்திரை – மருந்து மூலம் சர்ச்சரை நோய் பாதிப்பை தடுக்கலாம்.

சர்க்கரை நோயாளிகள் மாம்பழம் சாப்பிடலாமா?

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள்

சர்க்கரை நோயை கட்டுப்படுத்தும் வழிமுறைகள் என்ன என்று பார்த்தால், சரியான உணவு வகைகளை உட்கொண்டால், சர்க்கரை நோய் தீவிரத்தின் அளவை கட்டுப்படுத்தலாம்.

உணவு பழக்கத்தை சிறிது சிறிதாக மாற்ற வேண்டும்.

பழச்சாறு மட்டும் அருந்தி சாப்பிடாமல் இருத்தல், ஒருவேளை உணவை தவிர்த்தல் போன்றவை உடலிலுள்ள நச்சுப்பொருள்கள் அகலவும், தங்கியிருக்கும் கொழுப்பு கரையவும் உதவும்.

உணவைப் பொறுத்தவரை தீட்டிய அரிசியை விட கைக்குத்தல் அரிசியையே பயன்படுத்த வேண்டும். இது ரத்தத்தில் சர்க்கரை அளவு சேர்வதை வெகுவாக குறைக்கிறது.

கோதுமை, கம்பு, கேப்பை போன்றவை அரிசியை விட அடர்த்தியான பொருட்களாக இருப்பதால் ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைகிறது.

அதனால் சர்க்கரை நோயாளிகளின் கணையம் அதிக சிக்கலுக்கு உள்ளாகாமல் காப்பாற்றப்படுகிறது.

நார்ப்பொருள் அதிகம் நிறைந்த உணவை உட்கொள்ள வேண்டும். அது ரத்தத்தில் அதிக அளவு சர்க்கரை ஏறுவதை தடுக்கிறது. காய்கறிகள், கீரைகள் அதிகமாக பயன்படுத்தலாம்.

இனிப்பில்லா பழங்களை உண்ணலாம். பப்பாளி, தக்காளி, அன்னாசி, தர்பூசணி, பேரிக்காய், நாவல்பழம், கொய்யா, மாதுளை கொஞ்சமாக சேர்த்துக் கொள்ளலாம்.

பருப்பு வகைகள் மற்றும் முளைத்த பயறுகளை உணவோடு சேர்த்து கொள்ள வேண்டும்.

கார்போஹைட்ரேட் கலந்த மற்ற உணவுகளை விட, பருப்பு வகைகளால் இரத்த குளுக்கோஸ் தாக்கம் குறைவாகவே இருக்கும். அதனால் இது முக்கிய உணவாக கருதப்படுகிறது.

அதிகமாக உண்ணுவதால் ஒருவரின் உடலில் உள்ள இரத்த சர்க்கரையின் அளவு கூடுவதற்கு வாய்ப்பு அதிகம் உள்ளது.

அதனால் சிறிய அளவு உணவை போதிய இடைவேளையில் அடிக்கடி உண்ணவும்.

இது சர்க்கரை அளவு அதிகமாவதையும், கீழே இறங்காமலும் தடுக்கும்.

வேண்டுமெனில் நடுவே நொறுக்குத் தீனியாக பழங்கள், நார்ச்சத்துள்ள பிஸ்கட், மோர், தயிர், காய்கறியுடன் கலந்த உப்புமா போன்றவற்றை எடுத்துக் கொள்ளலாம்.

உடலுழைப்பு மற்றும் உடற்பயிற்சி குறைவு நீரிழிவு குறைபாட்டுக்கு முக்கிய காரணம்.

நீந்துதல், ஜாகிங் என்னும் சீரான ஓட்டம், சைக்கிள் (மிதிவண்டி) ஓட்டுதல், நடைபயிற்சி செய்தல் ஆகியவற்றில் ஈடுபட வேண்டும்.

மாடிப்படி ஏறுதல் மற்றும் யோகாசனம் செய்தல் ஆகியவையும் நீரிழிவு பாதிப்பை குறைக்கும்.

மனஅழுத்தமும் நீரிழிவு பாதிப்பு காரணமாகலாம். ஆனால், அது நீரிழிவை மட்டும் கொண்டு வராது. வேறு பல உடல் உபாதைகளுக்கும் காரணமாகலாம்.

ஆகவே, மனதை சந்தோஷமாக வைத்துக்கொள்ள வேண்டும். தேவையற்ற கவலைகளை தவிர்க்கவேண்டும்.

சர்க்கரை நோய் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டிய உணவுகள்

சர்க்கரை நோய் உள்ளவர்கள் குறைவான கார்போஹைட்ரேட், அதிகமான நார்ச்சத்து, தேவையான அளவு புரதம், வைட்டமின் மற்றும் கனிமங்கள் கலந்த உணவை உண்ண வேண்டும்.

இனிப்பு மற்றும் கொழுப்பு அதிகமுள்ள பண்டங்களை உண்ணக் கூடாது.

போதிய இடைவேளையில் (5 வேளை) சிறிய அளவில் உணவை உட்கொள்ள வேண்டும்.

வெல்லம், கல்கண்டு, சர்க்கரை, சீனி, தேன், ஜாம், கருப்பட்டி, குளுக்கோஸ், எல்லா இனிப்புப் பண்டங்கள், நெய், வெண்ணெய், டால்டா, கோலா, ஐஸ்க்ரீம், முந்திரிப்பருப்பு, க்ரீம் கேக், குளிர்பானங்கள், ஊட்டச்சத்து பானங்கள், முட்டையின் மஞ்சள் கரு, இறைச்சி போன்றவை உண்ணவே கூடாது.