கர்ப்பகால மார்பக வலிக்கு காரணம் என்ன? வலி நீங்க என்ன செய்யலாம்

மார்பக வலி ஏற்பட காரணம் என்று பார்த்தால், இது பல காரணங்களால் பெண்களுக்கு ஏற்படும்.

மார்பகத்தில் வலியோ புண்ணோ ஏற்படுவது பெண்களுக்கு இயல்பான ஒன்றாகும். பெண்கள் பருவம் அடைந்த நாட்கள் முதல் கர்ப்ப காலம் மற்றும் அதற்கு அப்பால் மார்பக வலி வரக்கூடும்.

இவ்வாறு மார்பக வலிக்கான காரணங்கள் மற்றும் தீர்வுகள் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

பெண்களுக்கு மார்பக வலி ஏற்படக் காரணம்

வழக்கமாக, மார்பக வலி என்பது ஒரு தீவிரமான பிரச்சினை அல்ல. பெண்கள் அடிக்கடி இது மார்பகப் புற்றுநோயின் ஒரு அறிகுறியாக இருக்கலாம் எனக் கவலைப்படுவர், ஆனால் அவ்வாறு இருப்பது அரிதானது ஆகும்.

இருந்தாலும், உடனடியான நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை பெறுதல் அறிவுறுத்தத்தக்கது ஆகும்.

பெண்களுக்கு மார்பக வலி ஏற்பட காரணம்  என்று பார்த்தால் அவர்களது மாதவிடாய் தான்.

மாதவிடாய் நாளுக்கு முன்பு உடலில் ஏற்படும் ஈஸ்ட்ரோஜென் மாற்றங்களும், அதனால் ஏற்படும் விளைவுகளினாலும் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

பெரும்பாலான பெண்களுக்கு தெரியாத ஒன்று, அவர்கள் உடுத்தும் பொருத்தமற்ற பிரா’க்களின் காரணமாகவும் மார்பக வலி ஏற்படுகிறது என்பது.

இறுக்கமாக அல்லது சிறிய கப் உடைய பிராவை நாள் முழுக்க அணிவதால் பெரும்பாலான பெண்களுக்கு மார்பக வலி ஏற்படுகிறது.

மார்பகங்களில் அசாதாரணமான வகையில் திரவம் – நிரம்பிய கட்டிகள் தோன்றுவதும் கூட, உங்கள் மார்பகங்களில் ஏற்படும் வலி, அசௌகரியம், மற்றும் கனமான தன்மை ஆகியவற்றுக்குக் காரணமாக இருக்கலாம்.

உங்கள் மார்பகங்களில் நீர்க்கட்டிகள் இருப்பதாக நீங்கள் சந்தேகப்பட்டால், உங்கள் மருத்துவரிடம் ஆலோசித்து சிகிச்சை பெற்றுக் கொள்ளுங்கள்.

சரியாக வியர்வை வெளிவராமல் இருந்தால் கூட பெண்களுக்கு மார்பக வலி ஏற்படும் என கூறப்படுகிறது. பொதுவாக குளிர் காலத்தில் அதிகமாக வியர்வை வராது.

ஆனால், வெயில் காலத்தில் கூட உங்களுக்கு சரியாக வியர்வை வராவிடில், நீங்கள் மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது.

மார்பக வலியைப் பாதிக்கின்ற காரணிகளைப் பற்றி ஆராய, 2016 ஆம் ஆண்டு ஒரு ஆய்வு நடத்தப்பட்டது.

அந்த ஆய்வில், மன அழுத்தம் மிகுந்த வாழ்க்கை முறை, மனப்பதற்றம், காஃபி அருந்துதல், இன்ன பிற காரணிகள், மார்பக வலியோடு தொடர்புடையவையாக இருப்பது கண்டறியப்பட்டது.

புகையிலை, மது, போதை மருந்துகள், இன்ன பிற போதைப் பழக்கங்களும் கூட மார்பக வலிக்கு காரணமாகலாம்.

அவை, உங்கள் உடலில் உள்ள பாலுறவு ஹார்மோன்களின் அளவில் சமநிலையின்மையினை ஏற்படுத்தி, மார்பக புற்றுநோய் உட்பட பல்வேறு மார்பக பிரச்சினைகள் ஏற்படும் அதிக பட்ச அபாயத்துக்கு, உங்களை உள்ளாக்குகின்றன.

சிலருக்கு அவர்களது உடலோடு ஒப்பிடும் போது, அளவுக்கு அதிகமாக பெரிய அளவில் மார்பகங்கள் இருக்கும். இதுவும் கூட மார்பக வலி ஏற்பட காரணமாக இருக்கிறது.

உடற்பயிற்சி செய்யும் பெண்கள், திடீரென அதிகமாக உடற்பயிற்சியில் ஈடுபடும் போது மார்பக வலி ஏற்படுவது சாதாரணம். எனவே, பயிற்சியாளரின் ஆலோசனையின் படி பயிற்சியில் ஈடுபட வேண்டியது அவசியம்.

கர்ப்பகால மார்பக வலி – கர்ப்ப காலத்தில் மார்பக வலி

கர்ப்ப காலத்தில் மார்பக மாற்றங்கள் பொதுவானவை. கர்ப்ப காலத்தில் மார்பக வலி ஏற்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன.

கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கர்ப்பக் காலத்தில் உண்டாகும் சில ஹார்மோன் மாற்றங்கள் பெண்களின் மார்பக வடிவத்தில் இருந்து, அதன் தன்மை வரை பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது.

கருவுற்று இருக்கும் பெண்களுக்கு மார்பக பகுதியில் ரத்த ஓட்டம் அதிகமாக இருக்கும்.

எனவே ஹார்மோன்கள் மாற்றம் அடைந்து திசுக்கள் உப்பியது போல இருப்பதால், அவர்களின் மார்பகம் பாரமாக இருப்பதுடன் கொஞ்சம் வலி மிகுந்ததாகவும் உணர்கிறார்கள்.

கர்ப்ப காலத்தின் முன்றாவது மாதத்தில் பால் சுழற்சி தூண்டும் ஹார்மோன்கள் வேலை செய்கின்றன.

இந்த தூண்டலுக்கு ஈஸ்ட்ரோஜன் மற்றும் புரோஜெஸ்ட்டிரோன் ஹார்மோன்கள் உதவி செய்கிறது.

மேலும் இந்த ஹார்மோன்கள் மார்பக வளர்ச்சியை ஊக்குவித்து தாய்ப்பாலினை சேமிக்க துவங்குகிறது. இந்த அடுத்த அடுத்த மாற்றங்களினால் நீங்கள் சங்கடமாக உணருவீர்கள்.

மேலும் உங்கள் மார்பகங்கள் மென்மையற்றதாகவும், சற்று புண்ணாகவும் இருக்கும். ஆனால் இந்த வலியானது கர்ப்பகாலம் நெருங்கும் போது குறைய தொடங்கி விடும்.

முதல் இரண்டு வாரங்களுக்கு பிறகு சில பெண்கள் இந்த வழியை பழகிக் கொள்ளகிறார்கள். கர்ப்ப காலத்திற்கு பின்பு வலி முற்றிலும் நீங்கி விடும்.

மேலும் கர்ப்பிணி பெண்களின் மார்பக பகுதியில் நீல நிறத்தில் நரம்புகள் வெளிப்படையாக தெரியும். இதற்கு காரணமும் மார்பகத்தில் ஏற்படும் அதிகப்படியான ரத்த ஓட்டம் தான். அதற்காக பயப்பட தேவையில்லை என மகப்பேறு நிபுணர்கள் கூறுகின்றனர்.

இது போன்ற பல காரணங்களால் கர்ப்பகால மார்பக வலி ஏற்படலாம்.

மார்பக வலி குறைய – மார்பக வலி நீங்க

கர்ப்ப காலத்தில் மார்பக அசவுகரியத்தை குறைப்பதற்கான சிறந்த வழிகளில் ஒன்று நன்கு பொருந்தக்கூடிய ப்ரா அணிவது தான். காட்டன் வகை பிராக்கள், சாஃப்ட் பேடிங் பிராக்கள் சிறந்தது.

புஷ் அப் பிராக்களை அணிய வேண்டாம். இது மார்பகத்தில் பாலைக் கட்ட வைத்து முலை அழற்சியை உண்டாக்கி விடும். எனவே பிராக்களை தேர்ந்தெடுப்பதில் கவனமாக இருங்கள்.

உங்கள் மார்பகத் திசுக்கள் எவ்வாறு இருக்கின்றன என்பதை அறிந்து கொள்ள, மாதம்தோறும் உங்கள் மார்பகங்களை சுய பரிசோதனை செய்யுங்கள்.

இதை தொடர்ந்து செய்து கொண்டு வருவதன் மூலம், உங்கள் மார்பகங்களில் ஏற்படும் மாற்றங்களை நீங்கள் கண்டறிய இயலும்.

மார்பகங்கள் விரிவடையும் போது அரிப்பு, புண் மற்றும் வலியில் இருந்து விடுபட சூடு தண்ணீரில் ஒத்தடம் கொடுப்பது மற்றும் மசாஜ் செய்வது உதவியாக இருக்கும்.

வெதுவெதுப்பான தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயை கொண்டு மெதுவாக விரல்களால் மசாஜ் செய்து விடலாம். இது உங்கள் மார்பகத்திற்கு ஈரப்பதத்தை கொடுக்கும்.

உணவு பழக்கங்களில் மாற்றங்களை கடைபிடிப்பதோடு வாரத்துக்கு மூன்று நாள் உடற்பயிற்சி செய்வதும் கூட மார்பக வலி நீங்க உதவும்.

உடல் அரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் அதற்கு மனநலமும் மிக முக்கியம். உங்களுக்கு அழுத்தம் ஏற்படாத அளவுக்க உற்சாகமாகவும், மகிழ்ச்சியாகவும் இருங்கள்.

உங்கள் கருத்தை கூறுங்கள்