கொரோனாவால் உயரிழந்த பெண்; சில நிமிடங்களில் வைத்தியசாலை ஊழியர் செய்த மோசமான செயல்

பல்சுவை செய்திகள் – பிரித்தானியாவில் கொரோனா நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், இறந்த நோயாளியின் வங்கி அட்டையைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்கியுள்ளார் மருத்துவமனை ஊழியர் ஒருவர்.

பிரித்தானியாவில் கொரோனா காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 83 வயது பெண் நோயாளி ஒருவர் உயிரிழந்த நிலையில், Ayesha Basharat (23) என்ற மருத்துவமனை ஊழியர், அந்த நோயாளியின் வங்கி அட்டையைக் கொண்டு சிப்ஸ், இனிப்புகள் மற்றும் குளிர்பானங்கள் வாங்கியிருக்கிறார்.

அதுவும் அந்த நோயாளி இறந்து 17 நிமிடங்கள் கூட ஆகாத நிலையில், அவரது வங்கி அட்டையை எடுத்துக்கொண்டு, அதை வைத்து உணவு வாங்கி சாப்பிட்ட சம்பவம் அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

நான்கு நாட்களுக்குப் பின் மீண்டும் பணிக்குத் திரும்பிய Ayesha, மீண்டும் அந்த அட்டையைப் பயன்படுத்தி பொருட்கள் வாங்க முயன்றுள்ளார்.

ஆனால், அதற்குள் அந்த அட்டை முடக்கப்பட்டுவிட்டதாக தெரிவிக்கிறார்கள் பொலிசார். அதைத் தொடர்ந்து பணியிலிருக்கும்போதே Ayesha கைது செய்யப்பட்டார்.

அவரை சோதனையிட்டபோது, அப்போதும் அவரிடம் அந்த நோயாளியின் வங்கி அட்டை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

நேற்று நீதிமன்றம் Ayeshaவுக்கு இரண்டு ஐந்து மாத சிறைத்தண்டனைகள் வழங்கி தீர்ப்பளித்தது. என்றாலும், அதை 18 மாதங்களுக்கு தள்ளிவைத்துள்ளதால், இப்போதைக்கு சிறை செல்லாமல் தப்பியிருக்கிறார் Ayesha.

பல்சுவை செய்திகள்

You may also like...

உங்கள் கருத்தை கூறுங்கள்